56 நாட்களுக்கு 100 ஜிபி டேட்டா வழங்கும் வி பிளான் சிறப்புகள்

வோடபோன் ஐடியா இப்போது வி என்ற புதிய பிராண்டில் களமிறங்கிய பிறகு 56 நாட்கள் வேலிடிட்டியுடன் 100 ஜிபி உயர் வேக டேட்டாவை ரூ.351 கட்டணத்தில் ப்ரீபெய்டு பயனாளர்களுக்கு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

விடெலிகாம் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு புதிய ஜிகாநெட் சேவையை துவங்கியுள்ள நிலையில் தனது 3ஜி வாடிக்கையாளர்களை 4ஜி  சேவைக்கு மாறுவதற்கான கோரிக்கையை விடுத்துள்ளது. எனவே நாடு முழுவதும் மிக வலுவான 4ஜி சேவையை வழங்கும் நோக்கில் இதற்கான நடவடிக்கைகளை வோடபோன் ஐடியா மேற்கொண்டு வருகின்றது.

ரூ.351 வி பிளான் சிறப்புகள்

ரூ.351 திட்டத்தில் வோடபோன் ஐடியா தனது பயனாளர்களுக்கு தினசரி எவ்விதமான கட்டுப்பாடும் இல்லாமல் 100 ஜிபி டேட்டா 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகின்றது. இந்த திட்டம் வொர்க் ஃபிரம் ஹோம் திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் வழங்கப்படவில்லை.

மேலும் சிறப்பு சலுகையாக ஆரம்ப நிலை ரூ.49 ரீசார்ஜ் திட்டத்த்தில் உள்ள ஒரு சில பயனாளர்களுக்கு 3 ஜிபி வரை டேட்டா நன்மையை வழங்குகின்றது. ஆனால் இந்த சலுகை குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கின்றது. பொதுவாக இந்த திட்டத்தில் 100 எம்பி டேட்டா மட்டும் வழங்கப்படுவது வழக்கமாகும்.

web title – Vi GIGAnet 4G offers 100 gb data work from home plan Rs.351