Vi (வோடபோன் ஐடியா) போஸ்ட்பெயிட் பிளான் கட்டணம் உயர்ந்தது

வி நிறுவனத்தின் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கான திட்டத்தில் ரூ.598 மற்றும் ரூ.749 ஆகிய இரு திட்டங்களின் கட்டணத்தை ரூ.50 வரை உயர்த்தியுள்ளது. எனவே, இனி RED குடும்ப போஸ்ட்பெயிட் திட்டங்களின் கட்டணம் ரூ.649 மற்றும் ரூ.799 ஆக கிடைக்க துவங்கியுள்ளது.

வோடபோன் ஐடியா தொர்ந்து பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வரும் நிலையில் கட்டணத்தை உயர்த்த துவங்கியுள்ளது. இதனை தொடர்ந்து மற்ற நெட்வொர்க்குகளும் விலை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

வி ரூ.649 RED S பிளான் சிறப்புகள்

முன்பாக ரூ.598 என அறியப்பட்ட பிளான் இப்போது ரூ.649 ஆக அதிகரிக்கப்பட்டு ரெட் எஸ் குடும்ப பிளானில் இரண்டு எண்களை பயன்படுத்த இயலும். அந்த வகையில் மொத்தமாக 80 ஜிபி டேட்டா, நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்புகள் கிடைக்கும். பிரைமரி எண்ணிற்கு 50 ஜிபி டேட்டா மற்றும் கூடுதல் எண்ணிற்கு 30 ஜிபி டேட்டா கிடைக்கும்.

வி ரூ.799 RED M பிளான் சிறப்புகள்

முன்பாக ரெட் எம் பிளான் ரூ.749 ஆக அறியப்பட்ட நிலையில் ரூ.50 கட்டணம் உயர்த்தப்பட்டு, இனி ரூ.799 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மூன்று இணைப்புகளை பயன்படுத்தலாம். மொத்தமாக 120 ஜிபி டேட்டா, நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்புகள் கிடைக்கும். பிரைமரி எண்ணிற்கு 60 ஜிபி டேட்டா மற்றும் கூடுதல் எண்களுக்கு தலா 30 ஜிபி டேட்டா கிடைக்கும்.

பொதுவாக இந்த திட்டங்களில் அமேசான் பிரைம் சந்தா பிரைமரி எண்ணிற்கு கூடுதல் சலுகையாகவும், அனைத்து எண்ணிற்கு வி மூவிஸ் மற்றும் டிவி சலுகையை பெற்றுக் கொள்ளலாம். இது தவிர இந்நிறுவனம் ரூ.1,348 கட்டணத்தில் ரெட் எக்ஸ் பிளான் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.