vodafone-idea-rebranded-as-vi

Vi (வோடபோன் ஐடியா) அறிமுகம் செய்துள்ள புதிய ரூ.1,197 ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தமாக 270 ஜிபி டேட்டா அதாவது நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா வீதம் 180 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகின்றது.

வோடபோன் ஐடியா இப்போது வி என பெயரிடப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில் புதிதாக பல்வேறு திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது. அந்த வரிசையில், 6 மாதம் அல்லது 180 நாட்கள் வேலிடிட்டி வழங்குகின்ற ரூ.1,197 பிளானில் சிறப்பு சலுகையாக ‘Weekend Data Rollover’ வசதி இணைக்கப்பட்டுள்ளது. பொதுவாக இந்நிறுவனம் வார நாட்களில் பயன்படுத்தாத டேட்டாக்களை வார இறுதி நாளில் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கின்றது.

Vi ரூ.1,197

முன்பாக குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு ரூ.1,197 திட்டம் இப்போது நாடு முழுவதும் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கின்றது. குறிப்பாக இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அனைத்து தொலைத்தொடர்பு அழைப்புகள் கிடைக்கின்றது. கூடுதல் சலுகையாக வி மூவிஸ் மற்றும் டிவி செயலியை இலவசமாக அனுகுவதுடன் வாரந்திர டேட்டா ரோல்ஓவர் வசதி கிடைக்கின்றது.

இந்நிறுவனம் வழங்குகின்ற மற்ற 1.5 ஜிபி டேட்டா பிளான்களின் பட்டியல் பின்வருமாறு;-

Vi வழங்குகின்ற துவக்கநிலை ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் வரம்பற்ற அழைப்புகள் 28 நாட்களுக்கு வேலிடிட்டி உடன் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

Vi ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்,  அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற அழைப்புகளுடன் 1.5 ஜிபி தினசரி தரவை வழங்குகிறது. 56 நாட்கள் செல்லுபடியாகின்ற திட்டம் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. இந்த பிளானை ரீசார்ஜ் செய்யும்போது வார இறுதி மாற்றம் டேட்டா ரோல் ஓவர் மற்றும் கூடுதல் 5 ஜிபி டேட்டா வழங்குகிறது.

Vi ரூ 555 ப்ரீபெய்ட் திட்டத்தில் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற அழைப்புகளுடன் 1.5 ஜிபி தினசரி டேட்டா உடன் 77 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டம் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது.

web title : VI Rs.1197 prepaid plan check benefits