jio

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் தொடர்ந்து முதலீடு அதிகரித்து வரும் நிலையில் ஃபேஸ்புக் மற்றும் சில்வர் லேக் என இரண்டினையும் தொடர்ந்து விஸ்டா ஈக்விட்டி பார்ட்னர்ஸ், ஜியோவின் 2.32% பங்குகளுக்கு ரூ .11,367 கோடியை முதலீடு செய்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் ஜியோ நிறுவனத்தில் மேற்கொள்ளப்படுகின்ற மூன்றாவது முதலீடு ஆகும்.

இந்த முதலீட்டின் மூலம் ஜியோ பிளாட்ஃபாரம் மதிப்பு ரூபாய் 4.91 லட்சம் கோடி டாலர் மதிப்புடையதாகவும், நிறுவன மதிப்பு 5.16 லட்சம் கோடி ரூபாயாகவும் மதிப்பிடப்படுகிறது” என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக 38.8 கோடி வாடிக்கையாளர்ளை கொண்டிருக்கின்றது. மேலும் இந்நிறுவனத்தின் டிஜிட்டல் சார்ந்த பயன்பாடுகளான ஜியோ சினிமா மற்றும் ஜியோ சாவான் போன்ற சேவைகளின் பயன்பாடு அதிகிரித்துள்ளது.\

சில்வர் லேக் மற்றும் பேஸ்புக்கிற்குப் பிறகு விஸ்டா ஜியோ பிளாட்ஃபார்ம்களில் மிகப்பெரிய முதலீட்டாளராக விளங்குகின்றது. பேஸ்புக் ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று ஜியோ பிளாட்ஃபார்ம்களில் 9.99% பங்குகளுக்கு 5.7 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்போவதா அறிவித்திருந்தது. பின்னர் மே 4 அன்று, அமெரிக்க தனியார் ஈக்விட்டி நிறுவனமான சில்வர் லேக், ஜியோ பிளாட்ஃபார்ம்களில் 1.15% பங்குகளுக்கு, 5,655.75 கோடி (747 மில்லியன் டாலர்) முதலீடு செய்யப்போவதாக குறிப்பிட்டிருந்தது.