நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா  வழங்கும் வோடபோன் சலுகை விபரம்

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக விளங்குகின்ற வோடபோன் இந்தியா நிறுவனம், ரூ.349 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகின்றது.

வோடபோன் 349

நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா  வழங்கும் வோடபோன் சலுகை விபரம்

ஜியோ , ஏர்டெல் பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்களின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் வோடபோன் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு முந்தைய ரூ. 348 திட்டத்தில் சில கூடுதலான திருத்தங்களை மேற்கொண்டு அதிரடியான சலுகையை அறிவித்துள்ளது.

முன்னதாக ரூ. 348 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா மற்றும் அழைப்பு நண்மைகள் வழங்கப்பட்ட ந்திலையில், தற்போது ரூ. 1 திட்டத்தின் கட்டணம் அதிகரிக்கப்பட்டு வரம்பற்ற உள்ளூர் , வெளியூர் அழைப்பு, இலவச ரோமிங் ஆகியவற்றுடன் நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா என நிர்ணயம் செய்யபட்டுள்ளது. மேலும் இந்த டேட்டா தரவு 3ஜி அல்லது 4ஜி சேவையிலும் பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜியோ வழங்கும் ரூ.299 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 84 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகின்றன.
ஏர்டெல் ரூ.349 சலுகையில் தினமும் 3 ஜிபி டேட்டா பெற முடியும். இதே சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் கிடைக்கின்றன. இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்ற இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.