vodafone

வோடபோன் நிறுவனம், தனது ப்ரீபெய்ட் பயனாளர்களுக்கு புதிதாக ஆல்-ரவுண்டர் பேக்குகள் என மொத்தமாக 10 குறைவான விலை கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை ரூ.15 முதல் அதிகபட்சமாக ரூ.245 வரை அறிவித்துள்ளது. வோடபோன் சந்தாதாரர்களுக்கான ஆல்-ரவுண்டர் பேக்குகளின் நோக்கம், ப்ரீபெய்ட் வாடிக்கையாளருக்குத் தேவையான டேட்டா, அழைப்புகள், ஆகியவற்றை மிக குறைந்த கட்டணத்தில் வழங்க உள்ளது.

குறிப்பாக இந்நிறுவனம் அறிவித்துள்ள பேக்குகளில் அதிகபட்ச கட்டணமாக உள்ள ரூ.245 ரீசார்ஜ் பிளானில், 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குவதுடன், உள்ளூர், தேசிய அழைப்புகள் மற்றும் ரோமிங் என அனைத்தும் நிமிடத்திற்கு 30 பைசா கட்டணத்தில் மேற்கொள்ளலாம். அதேவேளை, 2ஜிபி டேட்டா உட்பட ரூ.245 ரீசார்ஜிற்கு ரூ.245 முழு டாக் டைம் பெறலாம்.

அடுத்ததாக, உள்ள ரூ.145 கட்டணத்தில் உள்ள பிளானில் 42 நாட்கள் வேலிடிட்டி வழங்குவதுடன், உள்ளூர், தேசிய அழைப்புகள் மற்றும் ரோமிங் என அனைத்தும் நிமிடத்திற்கு 30 பைசா கட்டணத்தில் மேற்கொள்ளலாம். அதேவேளை, 1ஜிபி டேட்டா உட்பட ரூ.145 ரீசார்ஜிற்கு ரூ.145 முழு டாக் டைம் பெறலாம்.

இனி 100 ரூபாய்க்கு குறைவான ஆல் ரவுண்டர் பேக்குகளை காணலாம்

ரூ .100க்கு குறைவாக , வோடபோன் ரூ.15, ரூ.29, ரூ.35, ரூ.39, ரூ.45, ரூ .65, ரூ .69 மற்றும் ரூ .95 ஆல்-ரவுண்டர் பேக்கை வழங்குகிறது.

குறைந்த விலை ஆல்-ரவுண்டர் பேக் ரூ.15 ஆகும். இதன் மூலம் அனைத்து உள்ளூர், தேசிய மற்றும் ரோமிங் கால்கள்  நிமிடத்திற்கு  30 பைசா கட்டணத்தில்  3 நாட்களுக்கு மட்டும் வழங்குகின்றது. இதில் டேட்டா சலுகை மற்றும் டாக் டைம் இல்லை.

ரூ.29 திட்டத்தின் மூலம் அனைத்து உள்ளூர், தேசிய மற்றும் ரோமிங் கால்கள்  நிமிடத்திற்கு  30 பைசா கட்டணத்தில்  7 நாட்களுக்கு மட்டும் வழங்குகின்றது. இதில் டேட்டா சலுகை மற்றும் டாக் டைம் இல்லை.

ரூ.35 திட்டத்தின் மூலம் அனைத்து உள்ளூர், தேசிய மற்றும் ரோமிங் கால்கள் நிமிடத்திற்கு 60 பைசா கட்டணத்தில் 28 நாட்களுக்கு மட்டும் வழங்குகின்றது. இதில் டேட்டா சலுகை 100MB மற்றும் ரூ.26 டாக் டைம் வழங்கப்படும்.

ரூ.39 திட்டத்தின் மூலம் அனைத்து உள்ளூர், தேசிய மற்றும் ரோமிங் கால்கள்  நிமிடத்திற்கு 60 பைசா கட்டணத்தில் 28 நாட்களுக்கு மட்டும் வழங்குகின்றது. இதில் டேட்டா சலுகை 100MB மற்றும் ரூ.30 டாக் டைம் வழங்கப்படும்.

ரூ.45 திட்டத்தின் மூலம் அனைத்து உள்ளூர், தேசிய மற்றும் ரோமிங் கால்கள்  நிமிடத்திற்கு 60 பைசா கட்டணத்தில் 28 நாட்களுக்கு மட்டும் வழங்குகின்றது. இதில் டேட்டா சலுகை 100MB மற்றும் ரூ.45 டாக் டைம் வழங்கப்படும்.

ரூ .65 ப்ரீபெய்ட் திட்டமாகும், இது உள்ளூர், எஸ்.டி.டி அழைப்புகளை நிமிடத்திற்கு 60 பைசா கட்டணத்தில் பெறுவதுடன், ரூ. 55 டாக் டைம் மற்றும் 200 எம்பி டேட்டாவுடன் வழங்குகிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாகும்.

ரூ .69 ப்ரீபெய்ட் திட்டத்தில் லோக்கல் மற்றும் தேசிய அழைப்புகள் 250 நிமிடங்களாக பெறலாம், 250 எம்பி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்க உள்ளது. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாகும்.

கடைசியாக, ரூ .95 ஆல்-ரவுண்டர் பேக் உள்ளது, இது உள்ளூர் அல்லது தேசிய அழைப்புகளை நிமிடத்திற்கு 60 பைசா கட்டணத்தில் பெறுவதுடன், ரூ .95 டாக் டைம் மற்றும் 500 எம்.பி டேட்டாவுடன் 28 நாட்கள் செல்லுபடியாகும்.