இன்கம்மிங் கால்களுக்கு ரூ.24 மினிமம் ரீசார்ஜ் : வோடபோன் ஐடியா ஆஃபர்

நாட்டின் மிகப்பெரிய வோடபோன் ஐடியா டெலிகாம் நிறுவனத்தின் , ரூ.24 மினிமம் ரீசார்ஜ் பிளான் வாயிலாக இன்கம்மிங் அழைப்புகள், குறைந்த கட்டணத்தில் அவுட்கோயிங் அழைப்பினை மேற்கொள்ளலாம்.

வோடபோன் ஐடியா ஆஃபர்

பொதுவாக ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் தவிர மற்ற டெலிகாம் நிறுவனங்ளான வோடபோன் இந்தியா, ஐடியா செல்லுலார், மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் இலவச இன்கம்மிங் அழைப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.  குறைந்தபட்ச ரீசார்ஜ் ஏற்கொள்ளாத பயனாளர்களின் இன்கம்மிங் கால் நிறுத்தப்படுவதுடன் 90 நாட்களுக்கு பிறகு சிம் கார்டினை டீஏக்டிவேட் செய்து வருகின்றன.

இன்கம்மிங் கால்களுக்கு ரூ.24 மினிமம் ரீசார்ஜ் : வோடபோன் ஐடியா ஆஃபர்

அந்த வகையில் குறைந்தபட்ச ரீசார்ஜ் மேற்கொண்டால் பிளான் வேலிடிட்டி முடிவுக்கு பிறகு 15 நாட்கள் மட்டும் இன்கம்மிங் அழைப்புகள் வழங்கப்படுகின்றது. அதன்பிறகு இன்கம்மிங் அழைப்புகள் நிறுத்தப்படுகின்றது. இந்நிலையில் வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.24 குறைந்த கட்டணத்தில் மாதந்திர திட்டத்தை செயற்படுத்தி வருகின்றது.

ரூ.24 மதிப்பில் கிடைக்கின்ற புதிய ப்ரீபெயிட் ரீசார்ஜ் பிளான் ஆனது வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் டெலிகாமில் உள்ள  இரண்டு பயனர்களுக்கு பொருந்தும். இந்தத் திட்டமானது, குறிப்பாக அவர்களின் பயனர்களின் இன்கம்மிங் வேலிடிட்டியை அதிகரிக்க விரும்பும் பயனர்களுக்கு, வாய்ஸ் கால் மற்றும் டேட்டா நன்மைகளையும் பெற விருப்பமில்லாத பயனர்களுக்கு பொருந்தும். இத பிளான் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாகும்.

28 நாட்களுக்கு செல்லுபடியாகின்ற இந்த மினிமம் ரீசார்ஜ் பிளானில் 100 இலவச (வோடபோன் டூ வோடபோன்) (ஐடியா டூ ஐடியா) ஆன்-நெட்வொர்க் அழைப்புகள் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை கிடைக்கும். இந்த பிளானில் விநாடிக்கு 2.5 பைசா வசூலிக்கப்படும். இது உள்ளூர் மற்றும் வெளி மாநில அழைப்புகளுக்கு பொருந்தும். டேட்டா முறைக்கு 10KB அளவிற்கு 4 பைசா கட்டணம் செலுத்த வேண்டும், அதாவது ஒரு எம்பி டேட்டா பெற்றால் ரூ.4 செலுத்த வேண்டும். ரோமிங்கில், டேட்டா விகிதம் 10KB அளவிற்கு 10 பைசாவாகும், ஒரு எம்பி டேட்டா 10 ரூபாயாக இருக்கும்.

இன்கம்மிங் கால்களுக்கு ரூ.24 மினிமம் ரீசார்ஜ் : வோடபோன் ஐடியா ஆஃபர்

இந்த பிளானில்  ஒவ்வொரு உள்ளூர் எஸ்எம்எஸ் கட்டணம் ரூ. 1 வசூலிக்கப்படும் வெளி மாநிலங்களுக்கான எஸ்எம்எஸ் ரூ. 1.50 வசூலிக்கப்படும்  இந்த பிளானில் டாக்டைம் வழங்கப்படுவதில்லை.

இந்த திட்டம் முற்றிலும் இன்கம்மிங் அழைப்புகளுக்கு மொபைல் நெம்பர்களை தக்கவைத்துக் கொள்பவர்களுக்கு மட்டும் பொருத்தமானதாகும். இதுபற்றி உங்கள் கருத்தை மறக்காம கமென்ட் பன்னுங்க..,

இன்கம்மிங் கால்களுக்கு ரூ.24 மினிமம் ரீசார்ஜ் : வோடபோன் ஐடியா ஆஃபர்