VODAFONE 4g plans

வோடபோன் ஐடியா கூட்டு நிறுவனத்தின், வோடபோன் பயனாளர்களுக்கு ரூ.205 மற்றும் ரூ.225 என இரு விதமான ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்களை வரம்பற்ற அழைப்புகள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகின்றது. புதிய வோடபோன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே தொடர்ந்து காணலாம்.

வோடபோன் ரூ. 205 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்

முதலவதாக வோடபோனின் ரீசார்ஜ் பிளானில் ரூ. 205 மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. வோடபோன் ரூ.205 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் மூலம் வரம்பற்ற உள்ளூர் மற்றும் தேசிய அழைப்பு மேற்கொள்வதுடன் கூடுதலாக வேலிடிட்டி காலம் முழுவதும் 600 எஸ்எம்எஸ் வழங்குகின்றது.  35 நாட்கள் செல்லுபடியாகின்ற இந்த திட்டத்தில் பயனாளர்களுக்கு டேட்டா நன்மை மொத்தமாக 2 ஜிபி வழங்கப்படுகின்றது. மொத்த வரம்பை கடந்த பிறகு 1 எம்பி டேட்டாவிற்கு 50 பைசா கட்டணமாக வசூலிக்கப்படும் என குறிப்பிடபட்டுள்ளது.

வோடபோன் ரூ.225 பிளான்

அடுத்து வழங்கப்பட்டுள்ள ரூபாய் 225 ரீசார்ஜ் திட்டத்தில் 48 நாட்கள் செல்லுபடியாகின்ற வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் தேசிய அழைப்பு மேற்கொள்வதுடன் கூடுதலாக வேலிடிட்டி காலம் முழுவதும் 600 எஸ்எம்எஸ் வழங்குகின்றது. இந்த திட்டத்தில் டேட்டா நன்மை மொத்தமாக 4 ஜிபி வழங்கப்படுகின்றது. மொத்த வரம்பை கடந்த பிறகு 1 எம்பி டேட்டாவிற்கு 50 பைசா கட்டணமாக வசூலிக்கப்படும் என குறிப்பிடபட்டுள்ளது.

கூடுதல் இரு ரீசார்ஜ் திட்டங்களிலும், பயனர்களும் வோடபோன் ப்ளே பயன்பாட்டிற்கு எவ்விதமான கூடுதல் கட்டணமுமின்றி பெறலாம். இதன் மூலம் திரைப்படங்கள், இசை, வீடியோக்கள் மற்றும் நேரடி டிவியை இலவசமாக ஸ்ட்ரீம் செய்யலாம்.