சென்னையில் வோடபோன் சூப்பர் வோல்ட்இ சேவை அறிமுகம்

வோடபோன் இந்தியா நிறுவனம், 4ஜி சேவையை பல்வேறு வட்டங்களில் வழங்கி வரும் நிலையில் வோல்ட்இ எனப்படும் உயர்தர வாய்ஸ் கால் அனுபவத்தினை வழங்கவல்ல நுட்பத்தை சென்னை வட்டத்தில் வோடபோன் சூப்பர் வோல்ட்இ என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

வோடபோன் சூப்பர் வோல்ட்இ

தற்போது வோடபோன் வோல்ட்இ சேவை நாட்டில் மகாராஷ்டிரா, கோவா, மும்பை, தில்லி- என்சிஆர், குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடகா, உ.பி. மேற்கு மற்றும் உ.பி கிழக்கு ஆகிய வட்டங்களில் வழங்கப்பட்டு வரும் நிலையில், சென்னை வட்டத்திலும் இணைக்கப்பட்டுள்ளது. விரைவில் நாடு முழுவதும் வோல்ட்இ சேவையை வோடபோன் தொடங்க உள்ளது.

சென்னை வட்டத்தில் மட்டும், அறிமுகம் செய்யப்பட்டுள்ள சூப்பர் வோல்ட்இ சேவை தொடங்கப்பட்டிருந்தாலும் தமிழ்நாடு வட்டத்தில் அடுத்த சில மாதங்களில் வோல்டி சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது. மிக சிறப்பான வகையில் உயர் தர வாய்ஸ் காலிங் அனுபவத்தினை வழங்குகின்றது.

வோடபோன் வோல்ட்இ சேவையை சாம்சங், ஹூவாய், ஜியோனி, லாவா, மைக்ரோமேக்ஸ், கார்பன், ஐடெல் சியோமி, ஒன் பிளஸ், நோக்கியா, மற்றும் ஆப்பிள் ஆகிய மொபைல்களுக்கு வோல்ட்இ ஆதரவை வழங்கி வருகின்றது.