vodafone

வோடபோன் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்ற திட்டங்களில் மற்ற நெட்வொர்க் அவுட்கோயிங் அழைப்புகளுக்கு தற்பொழுது நடைமுறையில் உள்ள முறையே பின்பற்றப்படும் எவ்விதமான கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது என உறுதிப்படுத்தியுள்ளது.

வோடபோனின் சில பிளான்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை மற்ற நெட்வொர்க்குகளுக்கு மேற்கொண்டாலும் தொடர்ந்து தற்பொழுது நடைமுறையில் உள்ள இலவச முறையே பின்பற்றப்படும் என தனது டிவிட்டரில் வோடபோன் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக ஜியோ சமீபத்தில் மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு ஒரு நிமிடத்திற்கு 6 பைசா கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவித்ததை தொடர்ந்து ஜியோபோன் பயனாளர்களுக்கு வழங்கி வந்த ரூ.49 பிளானை நீக்கியுள்ளது. அதேவேளை 3ஜிபி டேட்டா வழங்கி வந்த ரூ.298 பிளானையும் நீக்கியுள்ளது.

ஜியோ சிம்கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், இனி ரீசார்ஜோடு சேர்த்து IUC (interconnect usage charge) ரீசார்ஜ் செய்ய வேண்டும். நாளை (அக்டோபர் 10) முதல் இந்த முறை நடைமுறைக்கு வருகிறது. பிரீபெய்ட் வாடிக்கையாளர்கள், போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் இரண்டு பேருக்குமே இந்த கட்டண முறை பொருந்தும். ஜியோ வாடிக்கையாளர்கள் அவுட்கோயிங் அழைப்புகளுக்கு கட்டணம் செலுத்தப்போவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் இன்று காலை ஒரு ட்வீட்டில், “ஓய்வெடுங்கள், வோடபோன் பிற நெட்வொர்க்குகளுக்கு எந்த கட்டணமும் இருக்காது. எனவே, நாங்கள் உங்களுக்கு வாக்குறுதியளித்ததை தொடர்ந்து பெற்று மகிழுங்கள். வோடபோன் வரம்பற்ற திட்டங்களில் உண்மையிலேயே இலவச அழைப்புகள் என ஒரு GIF படத்துடன் “ Free means Free ”என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த டிவிட்டில் ஏர்டெல் நிறுவனமும் எந்த கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது என ரீபிளே செய்துள்ளது.

https://twitter.com/VodafoneIN/status/1182132135928324096