ZEE5 பிரீமியம் இலவச சந்தாவுடன் 5 ரீசார்ஜ் பிளான்களை வெளியிட்ட Vi

Vi (வோடபோன் ஐடியா) வெளியிட்டுள்ள 5 புதிய ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்களில் ரூ.999 மதிப்புள்ள ZEE5 பிரீமியம் சந்தாவை முற்றிலும் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. ரூ.355, ரூ.405, ரூ.595, ரூ.795, மற்றும் ரூ.2595 என 5 பிளான்களும் கிடைக்க துவங்கியுள்ளது.

ரூபாய் 999 மதிப்பில் வழங்கப்படுகின்ற வருடாந்திர ஜீ5 பிரீமியம் சந்தா சலுகையை முற்றிலும் இலவசமாக வி தொலைத் தொடர்பு நிறுவனம் அறிவித்துள்ள சலுகையில் ரூ.355 முதல் ரூ.2595 வரை கிடைக்கின்றுது. முதலில் ஆரம்ப நிலை ரூ.355 திட்டத்தில் எவ்விதமான வாய்ஸ் கால் நன்மையும் வழங்கப்படாமல் 50 ஜிபி டேட்டா மட்டும் 28 நாட்களுக்கு கிடைக்கும்.

ரூ.405 பிளானில் அனைத்து நெட்வொர்க் வாய்ஸ் கால் வரம்பற்ற முறையில் வழங்கப்படுவதுடன், 90 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகின்றது.

ரூ.595 திட்டத்தில் அனைத்து நெட்வொர்க் அழைப்புகளும் வரம்பற்ற முறையில் கிடைப்பதுடன், நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா என 56 நாட்களுக்கு வழங்கப்படுகின்றது.

ZEE5 பிரீமியம் இலவச சந்தாவுடன் 5 ரீசார்ஜ் பிளான்களை வெளியிட்ட Vi

ரூ.795 திட்டத்தில் அனைத்து நெட்வொர்க் அழைப்புகளும் வரம்பற்ற முறையில் கிடைப்பதுடன், நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா என 84 நாட்களுக்கு வழங்கப்படுகின்றது.

வருடாந்திர வேலிடிட்டி வழங்கப்படுகின்ற ரூ.2595 திட்டத்தில் அனைத்து நெட்வொர்க் அழைப்புகளும் வரம்பற்ற முறையில் வழங்கப்படுவதுடன், நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது.

ZEE5 உறுப்பினர் சலுகையை எவ்வாறு பெறுவது?

தகுதியான சலுகை ரீசார்ஜ்களில் ஒன்றைக் கொண்டு ரீசார்ஜ் செய்வது கட்டாயமாகும்.
ZEE5 பிரீமியம் சந்தாவை இங்கே செயல்படுத்தவும்.(http://zee5offer.vimoviesandtv.in/)
ZEE5 செயலியை பதிவிறக்கி, பிரத்யேக ZEE5 உள்ளடக்கத்தை அனுபவிக்க இயலும்.

மேலே வங்கப்பட்டுள்ள மாதந்திர திட்டத்தின் மூலம் ZEE5 பிரீமியம் சேவை வருடாந்திர சந்தாவின் பலனை நீங்கள் தொடர்ந்து பெறுவீர்கள். நீங்கள் வழக்கமான Vi  ரூ. 219 அல்லது அதற்கு மேற்பட்ட வரமெபற்ற பிளான்களில் 12 மாத காலத்திற்கு ரீசார்ஜ் செய்தால் மட்டும் தொடர்ந்து சந்தாவை பெற முடியும் என்று வி நிறுவனம் தெரிவித்துள்ளது.