அன்லிமிடேட் அழைப்புக்கு மாறி FUP வரம்பை நீக்கிய வோடபோன் ஐடியா

இந்தியாவின் முதன்மையான டெலிகாம் நெட்வொர்க் நிறுவனமான வோடபோன் ஐடியா, தனது வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் அழைப்பு முறையை செயற்படுத்தி FUP வரம்பை நீக்கியுள்ளது.

வோடபோன் ஐடியா

ஜியோ, ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் தனது திட்டங்களில் பொதுவாக எவ்விதமான கட்டுப்பாடுமின்றி வரம்பற்ற அழைப்பு முறையை செயற்படுத்தி வருகின்றது. ஆனால் வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் நாள் ஒன்றைக்கு 250 நிமிடங்கள் மற்றும் வாரம் அதிகபட்சமாக 1000 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது.

அன்லிமிடேட் அழைப்புக்கு மாறி FUP வரம்பை நீக்கிய வோடபோன் ஐடியா

தினசரி வரம்பு மற்றும் வார அழைப்பு வரம்பை கடந்த பிறகு, ஒரு நிமிடத்திற்கு ரூ.1 அல்லது விநாடிக்கு ரூ. 1.2 பைசா வசூலிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஜியோ, ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் எவ்விதமான நிபந்தைனையும் இல்லாமல் அன்லிமிடெட் வாய்ஸ் கால் முறையை உள்ளூர், வெளியூர் மற்றும் ரோமிங் காலங்களில் இலவசமாக அழைப்பை வழங்குகின்றது.

ஆனால் வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனம், ப்ரீபெய்ட் FUP வரம்பை உயர்த்தியுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2000 நிமிடங்கள் அல்லது வாரம் அதிகபட்சமாக 14,000 நிமிடங்கள் மட்டும் வழங்கப்படுகின்றது. ஆனால் ஒரு நாளைக்கு வெறும் 1440 நிமிடங்கள் மட்டும் ஆகும். எனவே முற்றிலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் முறையை உள்ளூர், வெளியூர் மற்றும் ரோமிங் காலங்களில் இலவசமாக அழைப்பை வழங்குவது உறுதியாகியுள்ளது.

அன்லிமிடேட் அழைப்புக்கு மாறி FUP வரம்பை நீக்கிய வோடபோன் ஐடியா

சமீபத்தில் குறைந்தபட்ச ரீசார்ஜ் மேற்கொள்ளாத வாடிக்கையாளர்களை நீக்க தொடங்கியுள்ள டெலிகாம் நிறுவனங்கள் மாதந்தோறும் ரூ.35 அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்யாத ப்ரீபெய்ட் பயனாளர்களின் இன்கம்மிங் அழைப்பை 45 நாட்களில் நிறுத்த தொடங்கியுள்ளது. இதன் காரணமாக ஏர்டெல், ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்கள் லட்சகணக்கான வாடிக்கையாளர்களை இழக்க தொடங்கியுள்ளன, ஆனால் இது குறித்து இந்நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ள கருத்துகளில் ரீசார்ஜ் மேற்கொள்ள வாடிக்கையாளர்களை இழப்பதனால் எவ்விதமான நஷ்டமும் இல்லை என குறிப்பிட்டுள்ளன.