2020 வரை அலைக்கற்றை ஏலம் வேண்டாம் : வோடபோன் ஐடியா

இந்தியாவின் முன்னணி  தொலைத்தொடர்பு துறை நிறுவனங்கள் மிக கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளதால், 2020 வரை அலைக்கற்றை ஏலம் விடுவதனை நிறுத்தி வைக்க வேண்டும் என வோடபோன் ஐடியா நிறுவன கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

இந்திய  தொலைத்தொடர்பு துறை நிறுவனங்கள் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வருகைக்குப் பின்னர் மிக கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்ட வரும் நிலையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், நிதி சிக்கலை ஈடுகட்டுவதற்கு ஏர்டெல், ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்கள் மிக கடுமையாக போராடி வருகின்றது. இந்நிலையில் வோடபோன் ஐடியா நிறுவனம் 2020 வரை அலைக் கற்றை ஏலம் நடத்த வேண்டாம் என்று அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

வோடபோன் ஐடியா வெளியிட்டுள்ள கடிதத்தில் ” இந்தியாவில் 5ஜி அறிமுகப்படுத்தப்பட்ட பின்புதான் அதிகப்படியான அலைக்கற்றைக்கான தேவை அதிகரிக்கும். எனவே, 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகபபடுத்த முதலில் 4ஜி சார்ந்த தொழில்நுட்பம் நாடு முழுவதும் தன்னிறைவடைய வேண்டும்.

2020 வரை அலைக்கற்றை ஏலம் வேண்டாம் : வோடபோன் ஐடியா

எனவே 5ஜி அறிமுகப்படுத்துவதற்கான கட்டமைப்பு, தேவையான ஹார்ட்வேர் , நுட்பம் உள்ளிட்டவை தயாரான பிறகு அலைக்கற்றை ஏலம் நடத்தலாம். ஆகவே, 5ஜி தொழில்நுட்பத்துக்குத் தேவையான உள் கட்டமைப்புகளை உருவாக்க 2020 வரை ஆகலாம். எனவே அதுவரை அலைக்கற்றை ஏலம் விட வேண் டிய அவசியம் இல்லை என குறிப்பிடபட்டுள்ளது.

மேலும் தொலைத்தொடர்பு துறை நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில்  அலைக் கற்றை ஏலம் நடத்துவது முறையான முடிவாக இருக்காது என குறிப்பிட்டுள்ளது.