வோடபோன் ஐடியா நிறுவனம் தங்களது பயனாளர்களுக்கு 400MB கூடுதல் டேட்டா வழங்கும் சிறப்பு சலுகையை ரூ.399 மற்றும் ரூ.499 ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்களுக்கு வழங்குகின்றது.
வோடபோன் மற்றும் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ .399 ப்ரீபெய்டு திட்டம் இப்போது 1.4 ஜிபி தினசரி டேட்டா நன்மை வழங்கும் முன்பு 1ஜிபி டேட்டா வழங்கி வந்தது. இதேபோல், ரூ .499 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2.4 ஜிபி டேட்டா கிடைக்கும். அதாவது 400 எம்பி கூடுதலாக கிடைக்கும். குறிப்பாக கூடுதலாக 400 எம்பி டேட்டா பெறுவதற்கு அதிகாரப்பூர்வ இந்நிறுவன ஆப்களில் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
இந்த பயனை பெற முக்கியமாக வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்ட சந்தாதாரர்களில் வோடபோன் பயனாளர்கள் மை வோடபோன் ஆப் மற்றும் ஐடியா பயனாளர்கள் மை ஐடியா ரீசார்ஜ் செயலியில் மேற்கொள்ள வேண்டும்.
சமீபத்தில் வோடபோன் நிறுவனம், தனது ரூ .139 ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டத்தை 5 ஜிபி டேட்டா வழங்கும்படி மாற்றியமைத்தது. முன்னதாக இந்த பிளானில் 3 ஜிபி டேட்டாவுடன் 28 நாட்களுக்கு வழங்கப்பட்டது. வோடபோன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் வரம்பற்ற அழைப்பு சலுகைகளைத் தவிர, வேலிடிட்டி காலத்தில் 300 உள்ளூர் மற்றும் தேசிய எஸ்எம்எஸ் வழங்குகின்றது.