vodafone-idea-rebranded-as-vi

வோடபோன்-ஐடியா முழுமையான இணைப்பிற்குப் பிறகு இப்போது Vi  (ஆங்கில உச்சரிப்பு We, தமிழில் வீ) என்ற புதிய பெயரில் அதிகாரப்பூர்வமாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ நிறுவனத்தால் ஏற்பட்ட சரிவை ஈடுகட்ட கடந்த 2018 ஆம் ஆண்டு ஐடியா மற்றும் வோடபோன் இணைப்பு அறிவிக்கப்பட்டது.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆனையத்தின் அனுமதி அளித்ததை தொடர்ந்து இரு நிறுவனங்களும் தங்களுடைய நெட்வொர்க் முதல் அனைத்தையும் ஒன்றாக இணைக்க கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வந்தன. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி அனைத்து பணிகளும் நிறைவடைந்தது.

இரு நிறுவனங்களின் இணைப்பிற்கு பிறகு 40.8 கோடி வாடிக்கையாளர்களை கொண்டிருந்த வோடபோன்-ஐடியா படிப்படியாக வாடிக்கையாளர்களை இழந்து தற்போது வெறும் 28 கோடிக்கும் கூடுதலான வாடிக்கையாளர்களை மட்டுமே கொண்டுள்ளது. சமீபத்தில் உச்சநீதி மன்றம் ஏஜிஆர் வழக்கில் 10 ஆண்டுகால அவசகத்தை வழங்கியது. எனவே வோடபோன்-ஐடியா மீண்டும் புத்துயிர் பெற துவங்கியுள்ளது.

இந்நிலையில் இரு நிறுவனங்களின் இணைப்பினை முன்னிட்டு வோடபோன் ஐடியா என்ன்பதனை சுருக்கி இப்போது (Vi) வீ என அறிவிக்கப்பட்டுள்ளது.

வோடஃபோன் – ஐடியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரவீந்தர் தாக்கர், `இரண்டு வருடங்களுக்கு முன்பு வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் இணைக்கப்பட்டன. அப்போது முதல் இந்த இரண்டு நெட்வொர்க்குகள் மற்றும் இரு நிறுவனங்களின் செயல்முறைகளை ஒருங்கிணைப்பதில் அதிக கவனம் செலுத்தினோம். இன்று எங்கள் புதிய பிராண்டான வீ-யை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். வாடிக்கையாளர்களின் வாழ்க்கை, அவர்களின் நம்பிக்கை, முன்னேற்றம் ஆகியவற்றைச் சுற்றியே வீ-யின் சேவை கட்டமைக்கப்பட்டுள்ளது. வீ வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அதிக கவனம் செலுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.

புதிதாக இணையதளம் ஒன்றை துவங்கியுள்ளது. அதன் இணைப்பு – https://www.myvi.in/