வோடபோன் ஐடியா புத்தாண்டு சலுகை விபரம்

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக விளங்கும் வோடபோன் ஐடியா கூட்டு நிறுவனத்தின் சார்பாக ஆங்கில புத்தாண்டு வருவதையொட்டி சிறப்பு அமேசான் பே வவுச்சர் ஜனவரி 10, 2019 வரை வழங்கப்பட உள்ளது.

வோடபோன் ஐடியா நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் ரூ.95 கட்டணத்தில் ரீசார்ஜ் செய்யும்போது , வாடிக்கையாளர்கள் ரூ. 30 மதிப்பிலான அமேசான் பே வவுச்சர் வழங்கபடுகின்றது. இந்த வவுச்சரை கொண்டு மொபைல் பில், டி.டி.ஹெச். ரீசார்ஜ், அமேசான் தளத்தில் வாங்கும் பொருட்களுக்கு செலுத்த பயன்படுத்திக் கொள்ளலாம்.

புதிய சலுகையை பெற வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ.95 மதிப்பிலான சலுகையை தேர்வு செய்ய வேண்டும், எனினும் அமேசான் பே வவுச்சர் பெறும் போது, ரீசார்ஜ் கட்டணம் ரூ.65 விலையில் கிடைக்கும். வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனத்தின் பிரீபெயிட் சேவையை பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும். அந்த வகையில் வாடிக்கையாளர்கள் ரூ.95 விலை சலுகையை தேர்வு செய்து அதற்கான பலன்களை பெற்றுக் கொள்ளலாம்.
வோடபோன் ஐடியா புத்தாண்டு சலுகை விபரம்
முன்னதாக வோடபோன் மற்றும் அமேசான் நிறுவனங்கள் இணைந்து பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் பிரைம் சேவைக்கான சந்தாவில் 50 சதவிகித தள்ளுபடியை வழங்கின. தற்சமயம் வோடபோன் ரெட் போஸ்ட்பெயிட் பயனாளர்களுக்கு அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது.