சன் நெக்ஸ்ட் இலவசமாக வோடபோன் ஐடியாவில் மட்டும்

தென் இந்தியாவின் மிகப்பெரிய சன் டிவி நெட்வொர்கின், சன் நெக்ஸ்ட் வீடியோ சேவையை இலவசமாக நாட்டின் மிகப்பெரிய வோடபோன் ஐடியா டெலிகாம் நிறுவனத்தின் பயனாளர்கள் பெறலாம் என அறிவிக்கப்படுள்ளது.

சன் நெக்ஸ்ட்

சன் நெக்ஸ்ட் இலவசமாக வோடபோன் ஐடியாவில் மட்டும்

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு தென் இந்தியா மொழிகளில் சுமார் 30க்கு அதிகமான லைவ் டிவி சேனல், மற்றும் 4000 க்கு கூடுதலான மொழி வாரியான திரைப்படங்களை கொண்டுள்ள சன் நெக்ஸ்ட் சேவையை முதன்முதலாக அனுகும் டெலிகாம் நிறுவனமாக வோடபோன் ஐடியா விளங்குகின்றது.

வோடபோன் பிளே

வோடபோன் பிளே ஆப் சுமார் 10 மில்லியன் பயனர்களை கொண்டு இயங்கி வரும் நிலையில், சுமார் 300 லைவ் டிவி மற்றும் 9000 க்கு அதிகான படங்கள் உட்பட சுமார் 16 மொழிகளில் வீடியோ மற்றும் முக்கிய சீரியல்களை கண்டு மகிழலாம். தற்போது சன் நெக்ஸ்ட் ஆப் வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது.

சன் நெக்ஸ்ட் இலவசமாக வோடபோன் ஐடியாவில் மட்டும்

ஐடியா மூவிஸ் & டிவி

ஐடியா செல்லுலார் நிறுவனம், வழங்கி வருகின்ற ஐடியா மூவிஸ் மற்றும் டிவி வாயிலாக சுமார் 400-க்கு அதிகமான லைவ் டிவி மற்றும் 8500க்கு அதிகான திரைப்படங்கள் மற்றும் தற்போது சன் நெக்ஸ்ட் ஆப் வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது.

சாதாரணமாக சன் நெக்ஸ்ட் ஆப் பயன்படுத்த ரூ.49 மாதந்திர கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. மற்ற டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் ஜி5 தளத்தின் வீடியோக்களை வழங்கி வருகின்றது.