வோடபோன் ஐடியா 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது

இந்திய டெலிகாம் சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி ஜியோவுக்கு சவால் விடுக்க 20,000 கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ள வோடபோன் ஐடியா முடிவெடுத்துள்ளது. இந்த முதலீடு வாயிலாக வோடபோன் ஐடியா நெட்வொர்க் மிகப்பெரிய அளவில் பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த 15 மாதங்களில் வோடபோன் ஐடியா நிறுவனம் , மேற்கொள்ள உள்ள ரூபாய் 20,000 கோடி முதலீடு வாயிலாக  நெட்வொர்க்கை பலப்படுத்தும் திட்டமிடபட்டுள்ளது. அடுத்த 15 மாதங்களில் 20,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய வோடபோன் ஐடியா நிறுவனம் முடிவு செய்துள்தாக அந்நிறுவனத்தின் நிதித்துறை மூத்த அதிகாரி அக்சயா மூன்ரா தெரிவித்துள்ளார்.

ஜியோ நிறுவனத்தின் வரவிற்கு பிறகு வோடபோன், ஐடியா , ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் மிக கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்தன. இதன்காரணமாக தொலைத் தொடர்பு ஆர்காம், ஏர்செல் மற்றும் டாடா டெலிசர்வீசஸ் மிகப்பெரியளவில் நஷ்டத்தை சந்தித்து சந்தையிலிருந்து கடும் நிதி நெருக்கடியின் காரணமாக வெளியேறியன.

கடன் சுமையை குறைக்க வோடபோன் குழுமம் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் இணைந்து செயல்பட முடிவெடுத்து நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக செயல்பட தொடங்கியது. இந்நிலையில் தொடர்ந்து ஜியோவின் சலுகைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்கம்மிங் அழைப்புகளுக்கு கட்டணம் என்ற திட்டத்தை அறிவித்தன.

இந்த அறிவிப்பினால் இரு நிறுவனங்களும் சுமார் 5 மாதங்களில் 4 கோடிக்கு அதிகமான வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. ஆனால், தொடர்ந்த குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டத்தை செயற்படுத்தி வரும் நிலையில், இரு நிறுவனங்களும் சுமார் 20,000 கோடி முதலீடு மற்றும் உரிமை பங்குகளை வெளியிட்டு 25,000 கோடி ரூபாய் திரட்டவும் வோடபோன் ஐடியா நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.