vodafone idea

ஏ.ஜி.ஆர் பிரச்சனையில் சிக்கி தவிக்கும் நிலையில் வோடஃபோன் ஐடியா தனது வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூடுதலாக 1.5 ஜிபி டேட்டா என மூன்று திட்டங்களில் தினசரி மூன்று ஜிபி டேட்டாவை வழங்க துவங்கியுள்ளது. ரூ.249 பிளானில் இப்போது நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா என அறிவித்துள்ளது.

ரூ.249 மட்டுமல்ல 56 நாட்களுக்கு செல்லுபடியாகின்ற ரூ.399 மற்றும் 84 நாட்களுக்கு செல்லுபடியாகின்ற ரூ.599 என மூன்று திட்டங்களிலும் இப்போது கூடுதலாக வழங்குவதாக அதிகாரப்பூர்வமாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ரூ.249 பிளான் 28 நாட்களுக்கு

டேட்டா -3 ஜிபி டேட்டா (முன்பு 1.5ஜிபி டேட்டா)

வரம்பற்ற இலவச உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள் அனைத்து நெட்வொர்க்

தினமும் 100 எஸ்எம்எஸ்

வேலிடிட்டி 28 நாட்கள்

ரூ.399 பிளான் 56 நாட்களுக்கு 

டேட்டா -3 ஜிபி டேட்டா (முன்பு 1.5ஜிபி டேட்டா)

வரம்பற்ற இலவச உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள் அனைத்து நெட்வொர்க்

தினமும் 100 எஸ்எம்எஸ்

வேலிடிட்டி 56 நாட்கள்

ரூ.599 பிளான் 84 நாட்களுக்கு

டேட்டா -3 ஜிபி டேட்டா (முன்பு 1.5ஜிபி டேட்டா)

வரம்பற்ற இலவச உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள் அனைத்து நெட்வொர்க்

தினமும் 100 எஸ்எம்எஸ்

வேலிடிட்டி 84 நாட்கள்

கூடுதலாக இந்த மூன்று பிளானிலும் வோடஃபோன் பிளே மற்றும் ஜீ5 ஆப் சேவையை இலவசமாக வழங்க உள்ளது. இது நாட்டிலுள்ள அனைத்து வோடபோன் மற்றும் ஐடியா பயனாளர்களுக்கும் பொருந்தும்.

ஒருபுறம் ஏஜிஆர் சிக்கல் இருந்தாலும் தனது தொடர் இழப்புகளை ஈடுகட்டி மீண்டு வருவதற்கு வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வாரி வழங்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 15 ஆண்டுகாலத்தில் தனது 57 ஆயிரம் கோடி ரூபாயை செலுத்த விரும்புவதாக கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.