புதிய Vi REDX Family போஸ்ட்பெயிட் ரூ.1,348 பிளான் சிறப்பம்சங்கள்

Vi (வோடபோன் ஐடியா) டெலிகாம் நிறுவனம், புதிதாக வெளியிட்டுள்ள REDX Family போஸ்ட்பெயிட் பிளானில் ரூ.1,348 கட்டணத்தில் பல்வேறு சலுகைகளில் ஒரு வருட சந்தா நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜீ5 பிரீமியம் மற்றும் வி டிவி, மூவிஸ் சேவையை பயன்படுத்தலாம்.

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரெட் குடும்ப  போஸ்ட்பெயிட் திட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரெட் எக்ஸ் ரூ.1,348 திட்டத்தில் அதிகபட்சமாக இரண்டாம் நிலை எண்கள் நான்கு வரை இணைக்க இயலும், ஆனால் ஒவ்வொரு கூடுதல் எண்ணை இணைக்க ரூ.249 கட்டணமாக செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. மற்ற திட்டங்களில் உள்ளதை போல இலவசமாக இணைக்க இயலாது.

Vi REDX Family ரூ.1,348

டெலிகாம் டாக் வெளியிட்டுள்ள Vi REDX குடும்ப போஸ்ட்பெயிட் திட்டம் ரூ.1,348-ல் வரம்பற்ற டேட்டா நன்மை அதாவது மாதத்திற்கு 150 ஜிபி டேட்டா, எந்த நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.

இரண்டாம் நிலை இணைப்புகளுக்கு,  வரம்பற்ற குரல் அழைப்பு, 50 ஜிபி வரை ரோல்ஓவர் கொண்ட 30 ஜிபி அளவிலான டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்களை  வழங்குகிறது. ஆனால் இரண்டாம் நிலை இணைப்பை பெற ரூ.249 கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.

இந்த திட்டத்தில் ஒரு வருட சந்தா நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜீ5 பிரீமியம் மற்றும் வி டிவி, மூவிஸ் சேவையை பயன்படுத்தலாம். கூடுதல் சலுகையாக, பயனர்கள் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலைய ஓய்வறைகளுக்கு இலவச இணைய அணுகலையும் பெறுவார்கள்.