vodafone

ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய இரு நிறுவனங்களும் மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு ஆரம்பத்தில் FUP திட்டத்தை அறிவித்த நிலையில், தற்போது வோடபோன் ஐடியா அனைத்து குரல் வழி அழைப்புகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

கடந்த 3 ஆம் தேதி முதல் செயற்பாட்டுக்கு வந்த வோடபோன் ஐடியாவின் புதிய பிளான்களில் வோடபோன் ஐடியா டூ வோடபோன் ஐடியா அழைப்புகள் முற்றிலும் இலவசமாகவும், 28 நாட்கள் கொண்ட பிளான்களுக்கு 1000 நிமிடமும், 84 நாட்களுக்கு உள்ள பிளான்களுக்கு 3000 நிமிடங்கள் மற்றும் 365 நாட்கள் கொண்ட பிளானில் 12,000 நிமிடங்கள் வரை மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு FUP வழங்கிய நிலையில், டிசம்பர் 6 ஆம் தேதி முதல் அனைத்து நெட்வொர்க் அழைப்புகளும் எவ்விதமான கட்டணமுமின்றி தொடரும் என உறுதிப்படுத்தியுள்ளது.

சமீபத்தில் தொலைத் தொடர்பு கட்டணம் 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மற்ற நெட்வொர்க்குகளை விட ஜியோ கட்டணம் தொடர்ந்து சற்று குறைவான கட்டணத்தில் அமைந்திருந்தாலும், மற்ற நெட்வொர்க் அழைப்பிற்கு குறிப்பிட்ட FUP நிடங்களை கடந்த பிறகு நிமிடத்திற்கு 6 பைசா என உள்ள நிலையில், வோடபோன் ஐடியா ஃபீரி மீன்ஸ் ஃபீரி என உறுதிப்படுத்தியுள்ளது.

ஃபீரி மின்ஸ் ஃபீரி முற்றிலும் இலவச அழைப்புகளுக்கு மாறிய வோடபோன் ஐடியா

1 ஜிபி டேட்டா பிளான்

ரூ.219 அன்லிமிட்டேட் பிளானில் வரம்பற்ற குரல் வழி அழைப்புகள்,  நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும்.

1.5 ஜிபி டேட்டா பிளான்கள்

ரூ.249 அன்லிமிட்டேட் பிளானில் வரம்பற்ற குரல் வழி அழைப்புகள்,  நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும்.

ரூ.399 அன்லிமிட்டேட் பிளானில் வரம்பற்ற அழைப்புகள்,  நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 56 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும்.

ரூ.599 அன்லிமிட்டேட் பிளானில் வரம்பற்ற குரல் வழி அழைப்புகள்,  நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும்.

ரூ.2399 அன்லிமிட்டேட் பிளானில் வரம்பற்ற அழைப்புகள்,  நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும்.

2 ஜிபி டேட்டா பிளான்கள்

ரூ.299 அன்லிமிட்டேட் பிளானில் வரம்பற்ற அழைப்புகள்,  நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும்.

ரூ.699  அன்லிமிட்டேட் பிளானில் வரம்பற்ற அழைப்புகள்,  நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும்.

பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா பிளான்கள் என இரண்டு ஒன்றை போலவே அமைந்திருக்குகின்றது. ஜியோ ஆல் இன் ஒன் பிளான் சற்று விலை குறைவாக உள்ளது.