டெலிகோ நிறுவனமான வோடபோன் ஐடியா, இந்தியாவில் மியூசிக் ஸ்டிரிமிங் செயலியை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக விளங்கும் வோடபோன் ஐடியா இந்தியா நிறுவனம், தற்போது 38.7 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இந்நிறுவனம் வோடபோன் பிளே மற்றும் ஐடியா மூவீஸ் மற்றும் டிவி சேவைகளை வீடியோ தொடர்பான கன்டென்ட் முறையில் வழங்கி வருகின்றது.

இந்நிலையில் ஜியோ நிறுவனம் ஜியோ சாவன் மற்றும் ஏர்டெல் வின்க் என்ற மியூசிக் ஸ்டீரிமிங் செயலிகளை தங்களது பயனாளர்களுக்கு வழங்கி வரும் நிலையில், இதே போன்றதொரு செயலியை ஐடியா மற்றும் வோடபோன் இணைந்து வடிவமைத்து வருகின்றது. அடுத்த சில வாரங்களுக்குள் பிரத்தியேகமான மியூசிக் செயலி பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

சமீபத்தில் வோடபோன் நிறுவனம் ரூ.119, ரூ.1,699 மற்றும் ரூ.1,999 என மூன்று விதமான மாறுபாடு வேலிடிட்டி திட்டங்களை வெளியிட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் கடந்த மூன்றாவது காலண்டில் சுமார் ரூபாய் 5005 கோடி இழப்பை சந்தித்துள்ளது. மேலும் மூன்றாவது காலாண்டின் முடிவில் சுமார் 3.51 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.