ஜியோ எதிரொலியின் காரணமாக தொடர் சரிவினை வோடபோன் ஐடியா நிறுவனம் அடைந்து வருகின்றது. 5005 ரூபாய் கோடி இழப்பினை 2019 நிதி வருடத்தின் மூன்றாவது காலாண்டில் சந்தித்துள்ளது.

ஏர்டெல் , வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தொடர்ந்து மிகப்பெரிய அளவில் வாடிக்கையாளரை கடந்த சில மாதங்களாக இழந்து வரும் நிலையில், மூன்றாவது காலாண்டின் முடிவில் வோடபோன் ஐடியா நிறுவனம் சுமார் 3.51 கோடி வாடிக்கையாளர்களை இழந்து மொத்தமாக 38.72 கோடி வாடிக்கையாளர்களுடன் நாட்டின் முதன்மையான டெலிகாம் நிறுவனமாக வோடபோன் ஐடியா விளங்குகின்றது.

ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்ள் குறைந்தபட்ச ரீசார்ஜ் கூட மேற்கொள்ளாத வாடிக்கையாளர்களை நீக்குவதில் மிக தீவரமாக செயல்பட்டு வருகின்றது. மாதந்திர ரூ.24 குறைந்தபட்ச ரீசார்ஜ் கூட மேற்கொள்ள இயலாத வாடிக்கையாளர்களின் இன்கம்மிங் அழைப்புகள் ரத்து செய்து அவர்களின் இணைப்பினை இந்நிறுவனங்கள் துண்டிக்க தொடங்கியுள்ளன.

ஒவ்வொரு வாடிக்கையாளரின் சாராசரி வருமானம் கடந்த மூன்றாவது காலாண்டில் ரூ.89 ஆக அதிகரித்துத்துள்ளது. முந்தைய காலண்டின் முடிவில் ரூ.88 ஆக இருந்தது. சராசரி வருமானத்தை அதிகரிக்க பல்வேறு மறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

சில முக்கிய குறிப்புகள்

1 . வோடபோன் ஐடியா நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 38.72 கோடி ஆகும்.

2. தினசரி மாதந்திர டேட்டா பயன்பாடு 5.6 ஜிபி டேட்டாவிலிருந்து 6.2 ஜிபி டேட்டாவாக உயர்வு

3. மொத்தமாக இரு நெட்வொர்க் பயனர்கள் 2705 பில்லியன் MB டேட்டாவை பெற்றுள்ளனர்.

4. ஒரு பயனாளரின் சராசரி வருமானம் ரூ.89 ஆக அதிகரித்துள்ளது.

5. கடந்த 5 மாதங்களில் வோடபோன் ஐடியா ரேடியோ நெட்வொர்க் இணைப்பு 25 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

6. மேற்கு வங்கம், ஆந்திரா (ஹைதராபாத் தவிர), ஹரியானா, மத்தியப் பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், அசாம், வட கிழக்கு மற்றும் ஜம்மூ காஷ்மீர் ஆகிய பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளது.

வோடபோன் ஐடியா நிறுவனம் பயனாளர்களுக்கு சிறப்பான தரத்தில் சேவையை வழங்குவதற்கு ரூ.25,000 கோடி முதலீடு திட்டங்களை மேற்கொள்ள உள்ளது.

வோடபோனிலிருந்து வெளியேறிவிட்டீர்களா நீங்கள்.. உங்கள் கருத்து என்ன ? மறக்காம பதிவு பன்னுங்க..