இந்தியளவில் டேட்டா பயன்பாடு ஊரடங்கு உத்தரவினால் உயர்ந்து வரும் நிலையில் வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.251 மதிப்புள்ள ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது. 50 ஜிபி டேட்டா வழங்குவதுடன் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகின்றது.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் என இரு தனியார் டெலிகாம் நிறுவனங்களும் 50 ஜிபி டேட்டா வழங்கும் வகையில் ரூ.251 மதிப்புள்ள திட்டங்களை செயற்படுத்தி வரும் நிலையில் தற்போது வோடபோன் ஐடியா வெளியிட்டுள்ள திட்டமும் ஒரே மாதிரியாக அமைந்துள்ளது.
ஜியோ நிறுவனம் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகின்ற நிலையில், ஏர்டெல் தனது பயனாளர்களுக்கு முந்தைய பிளானின் வேலிடிட்டியுடன் இணைந்து செயல்படும் வகையில் அறிவித்துள்ளது.
வோடபோன் வெளியிட்டுள்ள இந்த ரூ.251 பிளானில் மொத்தமாக 50 ஜிபி உயர்வேக டேட்டா 4G/3G/2G முறையில் வழங்கப்பட உள்ளது. இதன் வேலிடிட்டி 28 நாட்கள் மட்டும் வழங்கப்படுகின்றது. தற்போது இந்த டேட்டா வவுச்சர் பீகார், சென்னை, குஜராத், ஹரியானா, கேரளா, தமிழ்நாடு (சென்னை தவிர), மற்றும் உ.பி. கிழக்கு வட்டங்களில் கிடைக்க துவங்கியுள்ளது. மற்ற வட்டங்களில் விரைவாக விரிவுப்படுத்த வாய்ப்புள்ளது.
வோடபோன் ரூ.98 டேட்டா வவுச்சர்
ரூ.98 டேட்டா வவுச்சரில் இப்போது இரட்டை பலன் டேட்டா வழங்கப்பட்டு தற்போது மொத்தமாக 12 ஜிபி உயர் வேக இணையத்தை வழங்குகின்றது. இதன் வேலிடிட்டி 28 நாட்கள் வழங்குகின்றது.
மூன்று தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களும் இப்போது ஒரே மாதிரியான டேட்டாவை ரூ.251 கட்டணத்துக்கு வழங்க துவங்கியுள்ளது.