வோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்

ஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 2019 இல், டிராய் ஐயூசி கட்டணத்தை நீக்குவதற்கான காலக்கெடுவை 2020 ஜனவரி 1 ஆம் தேதிக்கு பிறகு நீட்டித்தபோது, அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் மற்ற நெட்வொர்கிற்கு இணைப்பினை ஏற்படுத்த 6 பைசா கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஜனவரி 1 முதல் ஐயூசி கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி இலவசமாக அழைப்புகளை ஏற்படுத்தலாம்.

“Vi வாடிக்கையாளர்கள் எப்போதும் Vi அனலிமிடெட் திட்டத்துடன் உண்மையிலேயே வரம்பற்ற அழைப்பு சேவைகளை பெற்று வருகின்றனர். Vi அன்லிமிடெட் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் மற்ற நெட்வொர்க்குகளுக்கு அழைப்பு விடுப்பதில் கூட எந்தவித தடையும் இன்றி அனைத்து நெட்வொர்க்குகளிலும் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை தொடர்ந்து அழைக்க முடியும், ”என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் எவ்விதமான கட்டணமுமின்றி வசூலிக்கப்படாது என அறிக்கை வெளியிட்டுள்ளது.