vodafone

வோடபோன் ஐடியா நிறுவனத்திலிருந்து வோடபோன் வெளியேறுவதாக வந்த செய்தியை முற்றிலும் வோடபோன் ஐடியா பி.எஸ்.இ-க்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரியவந்துள்ளது. வோடபோன் மீதான வரி வழக்கில் அதிகரித்து வரும் வரி பொறுப்பு மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பிலிருந்து நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறுகிறது என்று தெரிவித்த செய்திகளை முற்றிலும் வோடபோன் ஐடியா மறுத்துள்ளது.

சமீபத்தில், மத்திய அரசின் புதிய தொலைத்தொடர்பு கொள்கையின் படி வருவாய் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. இதனால், வோடஃபோன் நிறுவனம் 28,309 கோடி ரூபாய் தொகையை மூன்று மாதங்களுக்குள் அளிக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளது. இந்த தீர்ப்பின் எதிரொலியே வோடபோன் வெளியேறலாம் என்ற செய்தி பரவியது.

IANS சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் எந்த நேரத்திலும் வோடபோன் இந்தியா வெளியேறலாம் என குறிப்பிட்டிருந்தது. ஆனால், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள வோடபோன் ஐடியா குழுமம், “மேற்கூறியவற்றைப் பொறுத்தவரை, வோடபோன் குழுமத்தின் இந்திய நடவடிக்கைகளில் இருந்து வெளியேறுவது குறித்து, வோடபோன் குழுமத்தைப் பொறுத்தவரையில் இந்த விஷயத்தில் நிறுவனம் எதையும் அறிந்திருக்கவில்லை என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம், எனவே இது குறித்து கருத்துத் தெரிவிக்க முடியாது,” வோடபோன் ஐடியா லிமிடெட் என்எஸ்இ மற்றும் பிஎஸ்இக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“சில மீடியாக்களில் வோடபோன் ஐடியா அதன் கடன் வழங்குநர்களை கடன் மறுசீரமைப்பிற்காக அணுகியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதை நாங்கள் ஆதாரமற்ற முறையில் மறுத்து நிராகரிக்கிறோம். இது ஆதாரமற்றது மற்றும் உண்மையில் தவறானது என்று நாங்கள் கடுமையாக மறுக்கிறோம். எங்களது கடன்களை எப்போது, செலுத்த வேண்டுமோ, அப்பொழுது நாங்கள் தொடர்ந்து செலுத்துகிறோம், “என்று வோடாப்டோன் ஐடியா தனது நிறுவனத்தின் செகரேட்டரி பங்கஜ் கப்டியோ கையெழுத்திட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.