airtel-vs-vodafone-idea

டிசம்பர் 3 முதல் தொலைத் தொடர்பு கட்டணத்தை உயர்த்தியுள்ள ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களின் பிளான்களை ஒப்பீட்டு எது சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் என அறிந்து கொள்ளலாம்.

பொதுவாக இரு நிறுவனங்களும் ஏறக்குறைய தங்களுடைய பிளான்களை 2 நாட்கள், 28 நாட்கள், 84 நாட்கள் மற்றும் 365 நாட்கள் என மாறுபட்ட வகையில் வழங்கியுள்ளன. ஆனால் இரண்டு பிளான்களும் ஒன்றை போலவே மற்றொன்று சலுகைகளை வழங்கி உள்ளது இங்கே குறிப்பிடதக்கதாகும்.

வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் பிளானகளில் ஆன்-நெட் அழைப்புகள் எனப்படும் தங்களது நெட்வொர்க் அழைப்புகள் முற்றிலும் வரம்பற்ற முறையில் வழங்குகின்றன. ஆனால் மற்ற நெட்வொர்க் அழைப்பு எனப்படுகின்ற ஆஃப்-நெட் அழைப்புகள் FUP அடிப்படையில் வழங்குகின்றன. குறிப்பாக 28 நாட்கள் வேலிடிட்டி பெற்ற பிளான் என்றால் 1000 நிமிட மற்ற நெட்வொர்க் அழைப்பு, 84 நாட்களுக்கு 3000 நிமிடங்கள் பேசலாம், அதுவே 365 நாட்கள் திட்டத்தில் அதிகபட்சமாக 12,000 நிமிடங்கள் வழங்கப்படுகின்றது.

மற்ற நெட்வொர்க் வரம்பற்ற கால்கள் எனப்படுகின்ற FUP வரம்பை கடந்த பின்னர் நிமிடத்திற்கு 6 பைசா கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ நிறுவனம் மற்ற நெட்வொர்க்குகளுக்கு நிமிடத்திற்கு 6 பைசா கட்டணமாக வசூலிக்கின்றது.

குறைந்தபட்ச ரீசார்ஜ் இனி ரூ.49

இரண்டு நெட்வொர்க்குகளும் ரூ.49 கட்டணத்தை அடிப்படை ரீசார்ஜ்வ பிளானாக 28 நாட்கள் வேலிடிட்டி உடன் அறிவித்துள்ளது. ரூ.38 மதிப்புள்ள டாக்டைம், 100 எம்பி டேட்டா மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் அனைத்து அழைப்புகளும் விநாடிக்கு 2.5 பைசா என (நிமிடத்திற்கு ரூ.1.50) ஆகும்.

வோடபோன் ஐடியா Vs ஏர்டெல் – வித்தியாசம் ரூ.1 மட்டும்

ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா பிளான்கள் ஒரே மாதிரியான டேட்டா மற்றும் அழைப்பு , எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகின்றது. வோடபோன் ஐடியாவை விட ரூ.1 மட்டும் குறைவாக ஏர்டெல் நிறுவன பிளான்கள் அமைந்துள்ளது.

கீழே உள்ள படங்களில் இரு நிறுவன திட்டங்களை அறிந்து கொள்ளலாம்.

Vodafone Idea plans

வோடபோன் ஐடியா Vs ஏர்டெல் : சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் ஒப்பீடு vodafone idea new plan

Airtel plans

airtel new plans ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 40 % வரை கட்டணத்தை உயர்த்த உள்ளது. ஆனால் 300 % வரை கூடுதல் பலனை வழங்கவும், ஜியோவின் பிளான்கள் டிசம்பர் 6 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.