ஜியோ டெலிகாம் வருகைக்கு பின்னர் நாளுக்கு நாள் டெலிகாம் சந்தையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வரும் சூழ்நிலையில், வோடபோன் இந்தியா ரூ.47 கட்டணத்தில் ஒரு நாள் மட்டும் செல்லுபடியாகின்ற பிளான் அறிமுகப்படுத்தியுள்ளது.

வோடபோன் ரூ.47 பிளான்

ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் கூடுதல் டேட்டா நன்மைகள் மற்றும் வரம்பற்ற அழைப்புகளை வழங்கி வரும் நிலையில், வோடபோன், ஐடியா,ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது.

ஐடியா செல்லுலார் ரூ.51 கட்டணத்தில் இரண்டு நாட்கள் வேலிடிட்டியுடன் 1ஜிபி டேட்டா வழங்கும் நிலையில், ஏர்டெல் ரூ.49 கட்டணத்தில் 1ஜிபி டேட்டா ஒரு நாள் வேலிடிட்டி கொண்டதாக வழங்குகின்றது.

இதே போன்று, வோடபோன் இந்தியா ரூ.47 கட்டணத்தில் ஒரு நாள் வேலிடிட்டியுடன் 3ஜி அல்லது 4ஜி சேவைகளில் 1ஜிபி டேட்டா வழங்குவதுடன், பயன்பாட்டுக்கு பிறகு டேட்டா கட்டணம் 10 Kbக்கு 4 பைசா என வசூலிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.

ஜியோ நிறுவனம், ரூ.49 கட்டணத்தில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளுடன் 1ஜிபி டேட்டாவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் ஜியோபோன் பயனாளர்களுக்கு வழங்குகின்றது.