இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக விளங்கும் வோடபோன் டெலிகாம் வோடபோன் சோட்டா சாம்பியன் என்ற பெயரில் அனைத்து வட்டங்களிலும் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக அறிமுகம் செய்துள்ளது.

வோடபோன் சோட்டா சாம்பியன்

நாட்டிலுள்ள அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களிலும் மாறுபட்ட கட்டணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சோட்டா சாம்பியன் பிளான் ரூ.38 விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.38 கட்டணத்தில் 100 நிமிட உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், 200 MB 2ஜி டேட்டா ஆகியவற்றை 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக அறிமுகம் செய்துள்ளது.

புதிய சோட்டா சாம்பியன் பிளான் அனைத்து வோடபோன் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தை ரீடெயிலர்கள், யூஎஸ்எஸ்டி, இணையம் மற்றும் மை வோடபோன் ஆப் வாயிலாக ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

வாடிக்கையாளர்கள் மிக சிறப்பான அனுபவத்தை வழங்கும் அறிவிக்கபட்டுள்ள இந்த திட்டத்தில் குறைந்தபட்ச விலையில் மாதம் முழுமைக்கான பலன்களை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக வோடபோன் இந்தியா இணை இயக்குனர் அவ்ணேஷ் கோஸ்லா கூறியுள்ளார்.