வோடபோன் சூப்பர்டே மற்றும் சூப்பர்வீக் பிளான் விபரம்

இந்தியாவின் முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் இந்தியா தனது 4ஜி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர்டே மற்றும் சூப்பர்வீக்  என இருவகையான புதிய பிளான்களை வெளியிட்டுள்ளது.

வோடபோன் சூப்பர்டே

இருவகையான புதிய திட்டங்களிலும் ஒரு நாள் மற்றும் 7 நாள் என அறிமுகப்படுத்தியுள்ளது.

சூப்பர்டே எனப்படும் ஒரு நாள் பிளானில் ரூ.19 கட்டணத்தில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் வோடபோன் எண்களுக்கு அழைப்பு மேற்கொள்வதுடன் கூடுதலாக 100MB 4ஜி டேட்டா 24 மணி நேரத்துக்கு கிடைக்கும்.

சூப்பர்வீக் எனும் 7 நாள் வேலிடிட்டி கொண்ட பிளானில் இரு பிளான்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ரூ.49 கட்டணத்தில்  வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் வோடபோன் எண்களுக்கு அழைப்பு மேற்கொள்வதுடன் கூடுதலாக 250MB 4ஜி டேட்டா கிடைக்கும்.

ரூ.89 கட்டணத்தில்  வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் வோடபோன் எண்களுக்கு அழைப்பு மேற்கொள்வதுடன் கூடுதலாக 100 நிமிட மற்ற நெட்வொர்க் அழைப்புளுடன் 250MB 4ஜி டேட்டா கிடைக்கும்.

மேலே தொகுக்கப்பட்டுள்ள அனைத்து பிளான்களும் 4ஜி சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You