வோடபோன்-ஐடியா இணைப்பு உறுதியான பிறகு , வோடபோன் இந்தியா நிறுவனம் ஜியோவுக்கு எதிராக ரூ. 569 மற்றும் ரூ. 511 என இரு மாறுபட்ட கட்டணத்தில் நாள் ஒன்றிற்கு 3ஜிபி டேட்டா மற்றும் 2 ஜிபி டேட்டா என முறையே வெளியிட்டுள்ளது.

வோடபோன் ஆஃபர்

இந்திய டெலிகாம் சந்தையில் ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்கள் அன்லிமிடெட் அழைப்புகள் என்றால் முழுமையான வரம்பற்ற அழைப்பு நன்மையை வழங்கி வருகின்ற நிலையில், தொடர்ந்து வோடபோன் இந்தியா வரம்பற்ற அழைப்பு நன்மை திட்டங்களில் குறிப்பிட்ட நிமிடங்கள் மட்டும் அழைப்பு நன்மைகளை செயற்படுத்தி வருகின்றது.

வோடபோன் 597

நாள் ஒன்றிற்கு 3 ஜிபி டேட்டா 3ஜி அல்லது 4ஜி வேகத்தில் வழங்குவதுடன் வரம்பற்ற வாய்ஸ் கால் நன்மை என்ற பெயரில் நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்கள் அல்லது வாரம் 1000 நிமிடங்கள் மட்டும் வழங்கப்படுகின்றது. தினசரி 100 எஸ்எம்எஸ் , ரோமிங் அழைப்பு இலவசம் என 84 நாட்களுக்கு செல்லுபடியாகின்றது.

வோடபோன் 511

நாள் ஒன்றிற்கு 2 ஜிபி டேட்டா 3ஜி அல்லது 4ஜி வேகத்தில் வழங்குவதுடன் வரம்பற்ற வாய்ஸ் கால் நன்மை என்ற பெயரில் நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்கள் அல்லது வாரம் 1000 நிமிடங்கள் மட்டும் வழங்கப்படுகின்றது. தினசரி 100 எஸ்எம்எஸ் , ரோமிங் அழைப்பு இலவசம் என 84 நாட்களுக்கு செல்லுபடியாகின்றது.

மேலே வழங்கப்பட்டுள்ள இரு திட்டங்களும் குறிப்பிட்ட சில வட்டங்களில் மட்டும் முதற்கட்டமாக கிடைக்க தொடங்கியுள்ளது.

இதைத் தவிர இந்நிறுவனம் ரூ. 509 கட்டணத்தில் 1.4ஜிபி டேட்டாவை 90 நாட்களுக்கும் , ரூ. 549 கட்டணத்தில் தினமும் 3.5 ஜிபி டேட்டா நன்மையை 28 நாட்களுக்கு வழங்குகின்றது. இந்த இரண்டு திட்டங்களிலும் வரம்பற்ற அழைப்பு நன்மை வழங்கப்படுகின்றது.