ஜியோவுக்கு ரெட் கார்ட் போட்ட வோடபோன் ரெட் அதிரடி பிளான்கள்

இந்தியாவின் முன்னணி நெட்வொர்க்குகளில் ஒன்றான வோடபோன் இந்தியா நிறுவனம், போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு என பிரத்தியேகமான வோடபோன் ரெட் பிளானில் 100 சதவீத கூடுதல் டேட்டா நன்மைகளை வழங்குவதுடன் சிறப்பு சலுகைகளை வோடஃபோன் இந்தியா அறிவித்துள்ளது.

வோடபோன் ரெட்

ஜியோவுக்கு ரெட் கார்ட் போட்ட வோடபோன் ரெட் அதிரடி பிளான்கள்

ஜியோ , ஏர்டெல், பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்களின் மிக கடுமையான சவால் மிகுந்த திட்டங்களை வோடபோன் தொடர்ந்து எதிர்க்கும் வகையில் சவாலான திட்டங்களை அறிவித்துள்ளது. மேலும் இலவசமாக அமேசான் பிரைம் சப்ஸ்கிரைப் மற்றும் வோடபோன் பிளே சப்ஸ்கிரைப் போன்றவற்றை பெற்றுள்ளது.

Vodafone RED Entertainment 399

100 % கூடுதல் டேட்டா வழங்கும் வகையில் ரெட் என்டர்டெயின்மென் ரூ.399 பிளானில் , முன்பாக 20 ஜிபி டேட்டா வழங்கப்பட்ட நிலையில், தற்போது 40 ஜிபி டேட்டா வழங்குவதுடன் ரோல்ஓவர் வாயிலாக 200ஜிபி டேட்டா வழங்கப்பட உள்ளது. இதைத் தவிர அன்லிமிடெட் வாய்ஸ் கால் உள்ளூர் , வெளியூர் மற்றும் ரோமிங் உட்பட கூடுதல் நன்மையாக இலவசமாக ஒரு வருட அமேசான் பிரைம் சப்ஸ்கிரைப், வோடபோன் பிளே சப்ஸ்கிரைப் மற்றும் ரெட் ஹாட் டீலர்ஸ் போன்றவற்றின் மதிப்பு ரூ.1498 ஆகும்.

ஜியோவுக்கு ரெட் கார்ட் போட்ட வோடபோன் ரெட் அதிரடி பிளான்கள்

Vodafone RED Entertainment+ 499 Plan

ரெட் என்டர்டெயின்மென்ட் பிளஸ் ரூ.499 பிளானில் , முன்பாக 40 ஜிபி டேட்டா வழங்கப்பட்ட நிலையில், தற்போது 75 ஜிபி டேட்டா வழங்குவதுடன் ரோல்ஓவர் வாயிலாக 200ஜிபி டேட்டா வழங்கப்பட உள்ளது. இதைத் தவிர அன்லிமிடெட் வாய்ஸ் கால் உள்ளூர் , வெளியூர் மற்றும் ரோமிங் உட்பட கூடுதல் நன்மையாக இலவசமாக ஒரு வருட அமேசான் பிரைம் சப்ஸ்கிரைப், வோடபோன் பிளே சப்ஸ்கிரைப் மற்றும் ரெட் ஹாட் டீலர்ஸ் போன்றவற்றின் மதிப்பு ரூ.1498 ஆகும்.

Vodafone RED-International R 1299 Plan

வோடபோன் ரெட் இன்டர்நேஷனல் ஆர் 1299 பிளானில், மொத்தமாக மாதந்தோறும் 100 ஜிபி டேட்டா நன்மையுடன் ரோல்ஓவர் வாயிலாக 500 ஜிபி டேட்டா வழங்கப்பட உள்ளது. இதைத் தவிர அன்லிமிடெட் வாய்ஸ் கால் உள்ளூர் , வெளியூர் மற்றும் ரோமிங் உட்பட 100 நிமிட சர்வதேச அழைப்புகள், கூடுதல் நன்மையாக இலவசமாக ஒரு வருட அமேசான் பிரைம் சப்ஸ்கிரைப், வோடபோன் பிளே சப்ஸ்கிரைப் மற்றும் ரெட் ஹாட் டீலர்ஸ் போன்றவற்றின் மதிப்பு ரூ.5498 ஆகும். மேலும் ரூ.1000 மதிப்புள்ள இரண்டு மாதம் நெட்ஃபிளிக்ஸ் சந்தா வழங்கப்படுகின்றது.

ஜியோவுக்கு ரெட் கார்ட் போட்ட வோடபோன் ரெட் அதிரடி பிளான்கள்

Vodafone RED-International L 1999 Plan

வோடபோன் ரெட் இன்டர்நேஷனல் எல் 1999 பிளானில், மொத்தமாக மாதந்தோறும் 200 ஜிபி டேட்டா நன்மையுடன் ரோல்ஓவர் வாயிலாக 500 ஜிபி டேட்டா வழங்கப்பட உள்ளது. இதைத் தவிர அன்லிமிடெட் வாய்ஸ் கால் உள்ளூர் , வெளியூர் மற்றும் ரோமிங் உட்பட 200 நிமிட சர்வதேச அழைப்புகள், கூடுதல் நன்மையாக இலவசமாக ஒரு வருட அமேசான் பிரைம் சப்ஸ்கிரைப், வோடபோன் பிளே சப்ஸ்கிரைப் மற்றும் ரெட் ஹாட் டீலர்ஸ் போன்றவற்றின் மதிப்பு ரூ.5998 ஆகும். மேலும் ரூ.1500 மதிப்புள்ள இரண்டு மாதம் நெட்ஃபிளிக்ஸ் சந்தா வழங்கப்படுகின்றது.

Vodafone RED-Signature L 2999 Plan

வோடபோன் ரெட் சிங்னேச்சர் எல் 2999 பிளானில், மொத்தமாக மாதந்தோறும் 300 ஜிபி டேட்டா நன்மையுடன் ரோல்ரோல்ஓவர் வாயிலாக 500 ஜிபி டேட்டா வழங்கப்பட உள்ளது. இதைத் தவிர அன்லிமிடெட் வாய்ஸ் கால் உள்ளூர் , வெளியூர் மற்றும் ரோமிங் உட்பட 200 நிமிட சர்வதேச அழைப்புகள், கூடுதல் நன்மையாக இலவசமாக ஒரு வருட அமேசான் பிரைம் சப்ஸ்கிரைப், வோடபோன் பிளே சப்ஸ்கிரைப் மற்றும் ரெட் ஹாட் டீலர்ஸ் போன்றவற்றின் மதிப்பு ரூ.5498 ஆகும். மேலும் ரூ.6000 மதிப்புள்ள 12 மாதம் நெட்ஃபிளிக்ஸ் சந்தா வழங்கப்படுகின்றது.

ஜியோவுக்கு ரெட் கார்ட் போட்ட வோடபோன் ரெட் அதிரடி பிளான்கள்