ரூ.10 டாக்டைம் ரீசார்ஜ் பிளானை அறிவித்த வோடபோன்

வோடபோன் இந்தியா நிறுவனம், டாக்டைம் திட்டங்களை நீக்கியிருந்த நிலையில் மீண்டும் ரூ.10, ரூ.1000 மற்றும் ரூ.5000 முழு டாக்டைம் திட்டத்தை தமிழ்நாடு மற்றும் சென்னை வட்டத்திற்கு வழங்கியுள்ளது.

வோடபோன் டாக்டைம் பிளான்

சமீபத்தில் வோடபோன் இந்தியா நிறுவனம், டாக்டைம் திட்டங்களை நீக்கியிருந்த நிலையில், மீண்டும் ரூ.10 உட்பட ரூ.1000 மற்றும் ரூ.5000 டாக்டைம் பிளான்களை வெளியிட்டுள்ளது. இந்த பிளான் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வோடபோன் நிறுவனம், ரீசார்ஜ் மேற்கொள்ளாத வாடிக்கையாளர்களுக்கு இன்கம்மிங் அழைப்புகளை நிறுத்தியது. அதனை தொடர்ந்து பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைக்களை மேற்கொண்டுள்ளதால், டாக்டைம்  திட்டங்களை நீக்கியிருந்தது.

இந்நிலையில் , மீண்டும் ரூ.10 டாக்டைம் பிளானில் ரூ. 7.47 டாக்டைம் வழங்குகின்றது. இந்த பிளானுக்கு வரம்பற்ற வேலிடிட்டி வழங்குகின்றது.

மற்ற இரு டாக்டைம் திட்டங்களான ரூ.1000 மற்றும் ரூ.5000 என இரண்டிலும் முழுமையான டாக்டைம் வழங்குகின்றது. இந்த பிளான்களுக்கு வரம்பற்ற வேலிடிட்டி வழங்குகின்றது.

ஆனால் இந்த பிளான்களில் கிடைக்கின்ற டாக்டைமிற்கு நீங்கள் அவூட்கோயிங் அழைப்புகளை மேற்கொள்ள குறைந்தபட்சம் எதாவது ஒரு பிளானை வைத்திருக்க வேண்டியது அவசியமாகின்றது.