இந்தியா வோடபோன் நிறுவனம் சர்வதேச ரோமிங் செய்பவர்களுக்கு ஏற்ற வகையில் தினசரி ரூ.180 கட்டணத்தில் வரம்பற்ற டேட்டா மற்றும் அழைப்புகளை வோடபோன் ஐரோம் ஃபீரி என்ற திட்டத்தில் வழங்கியுள்ளது.

வோடபோன் சர்வதேச ரோமிங் பிளான்

கடந்த ஏப்ரல் மாதம் சிங்கப்பூர், அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு சர்வதேச ரோமிங் பிளான்களை வெளியிட்ட வோடஃபோன் தற்போது அதே திட்டத்தை ஐரோப்பா நாடுகளுக்கு விரிவுப்படுத்தியுள்ளது.

வர்த்தக ரீதியான பயணங்கள் மற்றும் சுற்றுலா பயணங்கள் மேற்கொள்ளும் வோடபோன் சிம் வாடிக்கையாளர்கள் ஐரோப்பாவில் உள்ள இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, நெதர்லாந்து, துருக்கி, கிரீஸ், போர்ச்சுகல், செக் குடியரசு, ரோமானியா, ஹங்கேரி, மால்டா மற்றும் அல்பேனியா ஆகிய நாடுகளுக்கு செல்லுபடியாகும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.180 கட்டணத்தில் ஒரு நாளைக்கு பெறலாம், முழுமையான 24 மணி நேரத்துக்கு பெற ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. 28 நாட்களுக்கு செயல்படுத்த ரூ.180 தினசரி என மொத்தம் ரூ.5000 கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான், கத்தார், ஸ்வீடன், டென்மார்க், நோர்வே மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் ரோமிங் மேற்கொள்ளும் பயனாளர்கள் இந்த திட்டத்தில் வரம்பற்ற இலவச இன்கம்மிங் அழைப்புகள் மற்றும் நிமிடத்திற்கு ரூ.1 கட்டணத்தில் அழைப்புகள் மேற்கொள்ளவும், ஒரு எம்பி டேட்டா பயன்பாட்டிற்கு ரூ.1 கட்டணமாக வசூலிக்கப்படும்.

இந்த திட்டங்கள் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரீசார்ஜ் செய்வதற்கு மற்றும் முழுமையான விபரத்தை நாடுகள் வாரியாக அறிய மை வோடபோன் செயலி அல்லது www.vodafone.in/ir பக்கத்தை பார்வையிடுங்கள்.

மேலும் இந்நிறுவனம் தனது எம்-பேசா மொபைல் வாலட் வாயிலாக ரூ.30-ரூ.100 வரை ரீசார்ஜ் செய்பவர்களுக்கு முழு டாக்டைம் வழங்க உள்ளதாக வோடபோன் அறிவித்துள்ளது.