வோடபோன் 348
அதிகரித்து வரும் சந்தை போட்டியை நிலைப்படுத்திக் கொள்ள வோடபோன், ஏர்டெல், ஐடியா போன்ற நிறுவனங்கள் மிக சவாலான விலையில் டேட்டா பிளான்களை அறிமுகப்படுத்தி வருகின்றது.
சமீபத்தில் வோடபோன் நிறுவனம் ரூ.348 கட்டணத்தில் தினமும் பயன்பாட்டுக்கு 2 ஜிபி 4ஜி/3ஜி டேட்டா மற்றும் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 250 நிமிடங்கள் அல்லது வாரம் ஒன்றுக்கு அதிகபட்சமாக 1000 நிமிடங்கள் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வழங்குகின்றது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
பீகார், மத்திய பிரதேசம்,ஜார்கண்ட் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய வட்டங்களில் உள்ள 2ஜி சேவையை பெறும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
பீகார், ஜார்கண்ட் வட்ட ப்ரீபெய்டு பயனாளர்களுக்கு ரூ.179 கட்டணத்தில் வரம்பற்ற 2ஜி வேகத்திலான டேட்டா மற்றும் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 250 நிமிடங்கள் அல்லது வாரம் ஒன்றுக்கு அதிகபட்சமாக 1000 நிமிடங்கள் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வழங்குகின்றது. இந்த பேக்கின் வேலிடிட்டி 28 நாட்களாகும். மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் வட்டங்களில் ரூ. 176 கட்டணத்தில் இந்த பிளான் வழங்கப்படுகின்றது.
மேலதிக விபரங்களுக்கு வோடபோன் ஆப் மற்றும் இந்நிறுவனத்தின் இணையதளத்தை பயன்படுத்தலாம்.