வோடபோன் இந்தியா நிறுவனம், நீண்ட நாள் வேலிடிட்டி கொண்ட அதாவது 365 நாட்கள் செல்லுபடியாகின்ற ரீசார்ஜ் பிளானை ரூ.1,499 கட்டணத்தில் வோடபோன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

வோடபோன் ரூ.1,499

சமீபத்தில் அன்லிமிடெட் அழைப்பு முறைக்கான FUP வரம்பை நீக்கியுள்ளதை தொடர்ந்து, வோடபோன் நிறுவனம், 365 நாட்கள் செல்லுபடியாகின்ற நீண்ட நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிளானை வெளியிட்டுள்ளது. இந்த பிளான் ஜியோ நிறுவனத்தின் ரூ.1,699 பிளானுக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1,499 கட்டணத்தில் வெளியிடப்பட்டுள்ள ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளானில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 1 ஜி.பி. உயர்வேக டேட்டா, வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்பு, இலவச ரோமிங் மற்றும் நாள் தோறும் 100 குறுஞ்செய்திகள் வழங்கப்படுகின்றது.

இந்த திட்டத்தில் தினசரி உயர்வேக டேட்டா உச்ச வரம்புக்கு பிறகு ஒரு எம்பி டேட்டா ரூ.50 பைசா கட்டணத்தில் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 365 நாட்கள் செல்லுபடியாகும். இந்த பிளானில் கூடுதலாக வோடபோன் பிளே சப்ஸ்கிரைப் இலவசமாக வழங்கப்படுகின்றது.

ஜியோ நிறுவனத்தின் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.1,699 பிளானில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 1.5 ஜி.பி. உயர்வேக டேட்டா (மொத்தமாக 547.5GB டேட்டா), வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்பு, இலவச ரோமிங் மற்றும் நாள் தோறும் 100 குறுஞ்செய்திகள் வழங்கப்படுகின்றது. இந்த திட்டத்தில் தினசரி உயர்வேக டேட்டா உச்ச வரம்புக்கு பிறகு டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்படுகின்றது. மேலும் ஜியோ செயலிகள் இலவசமாக வழங்கப்படுகின்றது.