மிக கடுமையான போட்டியை எதிர்கொண்டு வரும் வோடபோன் இந்தியா தொடர்ந்து புதிய திட்டங்களை அறிவித்து வரும் நிலையில் புதிதாக ரூ.189 கட்டணத்தில் அதிகபட்சமாக 56 நாட்கள் செல்லுபடியாகின்ற திட்டத்தை அறிவித்துள்ளது.

வோடபோன் இந்தியா நிறுவனம் மிக அதிகப்பட்டியான 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.189 திட்டத்தில் மொத்தமாக 2 ஜிபி உயர்வேக டேட்டா, வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் வாய்ஸ் கால் நன்மை , இலவச ரோமிங் ஆகியவற்றை பெற்றுள்ளது. வோடபோன் தொடர்ந்து வரம்பற்ற அழைப்புகள் என்ற பெயரில் வழங்கினாலும் அதிகபட்சமாக நாள் ஒன்றிற்கு 250 நிமிடங்கள் அல்லது வாரம் 1000 நிமிடங்கள் மட்டும் வழங்குகின்றது. மேலும் இந்த திட்டத்தில் எவ்விதமான எஸ்எம்எஸ் நன்மையும் வழங்கப்படவில்லை.

இந்த திட்டத்தில் குறிப்பாக எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற டேட்டா முறை மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மை இல்லையென்றாலும் 56 நாட்களுக்கு சராசரியாக குறைந்த அளவில் அழைப்பு மற்றும் டேட்டாவை பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே ஏற்றதாக இந்த திட்டம் அமைந்திருக்கின்றது.

குறிப்பாக இந்த புதிய வோடபோன் 189 பிளான் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் சோதனை அடிபட்டையில் வழங்கப்பபட்டு உள்ள நிலையில் விரைவில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.