வோடபோனின் ரூ.476 ரீசார்ஜ் பிளானில் 1.6 ஜிபி டேட்டா நன்மை

வோடபோன் ஐடியா கூட்டு நிறுவனத்தின், வோடபோன் இந்தியா ரூ.476 கட்டணத்தில் இலவச வாய்ஸ் கால் , நாள் ஒன்றுக்கு 1.6 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகின்றது. அனைத்து வட்டங்களிலும் இந்த சலுகை கிடைக்கப் பெறும்.

வோடபோன் ரூ.476

வோடபோன் நிறுவனம் ஜியோ போட்டியை எதிர்கொள்ள தொடர்ந்து மிக சவாலான திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது. சமீபத்தில் குறைந்தபட்ச ரீசார்ஜ் பிளான் ரூ. 24 மற்றும் நீண்ட நாள் என 6 மாதம் வேலிடிட்டி பெற்ற ரூ. 154 மற்றும் ஒரு வருட வேலிடிட்டி கொண்ட ரூ.1,699 பிளான் உட்பட ரூ.10, ரூ.1000 மற்றும் ரூ.5000 டாக்டைம் சலுகைகளை வெளியிட்டுள்ளது. அந்த வரிசையில் புதிதாக ரூ.476 கட்டணத்தில்  பிளான் ஒன்றை அறிவித்துள்ளது.

ரூ.479 ரீசார்ஜ் சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளி மாநில மற்றும் ரோமிங் அழைப்பினை அனைத்து நெட்வொர்க்குகளுக்கு நாடு முழுக்க மேற்கொள்ள வழங்கப்படுகிறது. இதுதவிர, தினமும் 100 எஸ்எம்எஸ் இலவச லைவ் டிவி, வெப் சீரியல்கள், திரைப்படங்கள் மற்றும் பல்வேறு வீடியோ  பலன்களை வோடபோன் பிளே ஆப் மூலம் வழங்குகிறது.

வோடஃபோன் அறிவித்திருக்கும் ரூ.479 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.6 ஜிபி டேட்டா, இந்த பிளான் வேலிடிட்டி 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் முழு வேலிடிட்டி காலத்தில் வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு மொத்தமாக 134.4 ஜிபி டேட்டா பலனை பெறுவார்கள் என தெரிவிக்கிப்பட்டுள்ளது.

ஆனால் இந்த பிளானில் உள்ள முக்கியமான குறை என்னவென்றால் வர்த்தக ரீதியான அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் காரணமாக முழுமையான வரம்பற்ற அழைப்பை பெற இயலாது.

வோடபோன் பிளே

இந்த பிளானில் கூடுதல் சலுகையாக வோடபோன் பிளே சேவையில் 300 க்கு அதிகமான லைவ் சேனல்கள் மற்றும் 10,000 அதிகிமான மொழிவாரியான திரைப்படங்கள் மற்றும் சன் டிவி குழுமத்தின் சேனல்கள் மற்றும் சீரியல்களை பெறலாம்.

வோடபோன் பிளே ஆப் சேவையை பெற PLAY  என டைப் செய்து 199 என்ற எண்ணுக்கு அனுப்பினால் இதற்கான டவுன்லோட் லிங்க் கிடைக்கப்பெறும்.

போட்டியாளரான ஜியோவின் பிரசத்தி பெற்ற திட்டமான ரூ.399 பிளானில், தினமும் 1.5 ஜிபி டேட்டா, அளவில்லா வாய்ஸ் கால் என இந்த பிளான் வேலிடிட்டி 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.