அமேசான் வோடபோன் கூட்டணி : 45GB இலவச டேட்டா பெற என்ன வழி ?

இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் தளங்களில் ஒன்றான அமேசான் தொலை தொடர்பு துறையில் இரண்டாவது இடத்தில் உள்ள வோடபோன் நிறுவனத்துடன் இணைந்து 45 ஜிபி இலவச டேட்டாவை 5 மாதங்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.

அமேசான் வோடபோன் கூட்டணி

வோடபோன் ப்ரீபெய்டு மற்றும் போஸ்பெயிட் என இரு தரப்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்ற இந்த சிறப்பு சலுகையில் 5 மாதங்களுக்கு மாதந்தோறும் 9 ஜிபி டேட்டா இலவசமாக பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு பெறுவது ? என்ன விதிமுறைகள் என காணலாம்.

மே 11 முதல் ஜூன் 30, 2017 வரையிலான காலகட்டத்தில் அமேஸான் தளத்தில் 4ஜி ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்களுடைய வோடபோன் 4ஜி சிம் கார்டினை சிம் ஸ்லாட் ஒன்றில் பொருத்திய பின்னர்,  முதல் மாதம் ரீசார்ஜ் செய்ய குறைந்தபட்ச 1ஜிபி டேட்டா அல்லது அதற்கு மேற்பட்ட எந்த ரீசார்ஜ் பிளான் தேர்வு செய்தாலும் 9 ஜிபி இலவச டேட்டாவை 5 மாதங்கள் தொடர்ந்து பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதம் 9 ஜிபி டேட்டா வழங்கப்படுவது 28 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும், கால அளவினை பெற்றதாகும்.முதல் 5 மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களும் ரீசார்ஜ் பிளானை தேர்வு செய்வதில் குறைந்தபட்சமாக 1ஜிபி டேட்டா பிளானாக இருப்பது அவசியமாகும். இந்த சலுகையை அனைத்து வோடஃபோன் ப்ரீபெயிடு மற்றும் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களும் 4ஜி ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் வாங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இது போன்றதொரு  சலுகையை ஐடியா மற்றும் ப்ளிப்கார்ட் இணைந்து வழங்கியுள்ளது.

Recommended For You