இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக விளங்கும் வோடபோன் ரூ.399 கட்டணத்தில் 90 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் ஆகியவற்றை 90 நாட்களுக்கு வாரி வழங்குகின்றது.

வோடபோன் ஆஃபர்

ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் வருகைக்கு பின்னர் தொலைத்தொடர்பு துறையில் மிக கடுமையான சவால்கள் நிறைந்துள்ள நிலையில் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் பல்வேறு திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 19ந் தேதிக்குள் ஜியோ ரூ.399 தன் தனா தன் திட்டத்தில் சிறப்பு 100 % கேஸ்பேக் சலுகைகளை அறிவித்துள்ள நிலையில், இந்த திட்டத்தில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளுடன், தினசரி 1ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற எஸ்.எம்.எஸ் ஆகியவற்றை வழங்குகின்றது.

வோடபோன் நிறுவனம் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.399 கட்டணத்தில் 6 மாதங்களுக்கு மொத்தம் 90 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் ஆகியவற்றை வழங்குகின்றது.

மேலும் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.499 விலையில் திட்டம் வழங்கப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.100 தள்ளுபடி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி அளவு 4ஜி டேட்டா மூன்று மாதங்களுக்கும், வரம்பற்ற உள்ளூர், வெளியூர் அழைப்புகள் வழங்கப்பட உள்ளது. இது தொடர்பான விபரங்களை 9582566666 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் ரூ.399 கட்டணத்தில் தினசரி 1ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் ஆகியவற்றை 84 நாட்களுக்கு வழங்குகின்றது.

சமீபத்தில் ஏர்செல் நிறுவனம் அதிரடியாக ரூ.999 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 30ஜிபி டேட்டா ஒரு சில வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக தெரிய வந்துள்ளது.