மைக்ரோமேக்ஸ் மற்றும் வோடபோன் இணைந்து கேஸ்பேக் சலுகையை தொடர்ந்து நீட்டித்திருப்பதுடன் பழைய மற்றும் புதிய வோடபோன் சிம் வாடிக்கையாளர்களுக்கும் அதிகபட்சமாக ரூ.2,200 வரை கேஸ்பேக் சலுகையை வழங்குகின்றது.

வோடபோன்-மைக்ரோமேக்ஸ்

மைக்ரோமேக்ஸ் மொபைல் தயாரிப்பாளரின் தொடக்கநிலை சந்தையில் கிடைக்கின்ற 4ஜி ஆதரவை பெற்ற பாரத் 2 பிளஸ், பாரத் 3 , பாரத் 4 மற்றும் கேன்வாஸ் -1 ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு அதிகபட்சமாக ரூ.2,200 வரை கேஸ்பேக்கினை வழங்குகின்றது.

ரூ.2,200 பெறுவது எவ்வாறு ?

மேலே வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போன்களில் ஏதேனும் ஒன்றை வாங்கும் பயனாளர்களுக்கு வோடபோன் சிம் கார்டினை கொண்டு மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.150 ரீசார்ஜ் செய்யும் பட்சத்தில் அடுத்த 18 மாதங்களுக்கு பிறகு முதற்கட்டமாக ரூ.900 கேஸ்பேக் வழங்கப்படும், அதன் பிறகு அடுத்த 18 மாதங்களுக்கு பிறகு ரூ.1300 என மொத்தம் ரூ.2,200 வரையிலான கேஸ்பேக் வோடபோன்  M-Pesa வாலட் வாயிலாக பெறலாம்.

அதாவது 36 மாதங்களுக்கு குறைந்தபட்சம் மாதந்தோறும் ரூ.150 ரீசார்ஜ் செய்திருக்க வேண்டியது அவசியமாகும்.

ஜியோ நிறுவனம் வழங்கி வரும் ரூ. 2500 கேஸ்பேக் சலுகைக்கு எதிராக வோடபோன் சலுகை நிலைநிறுத்தப்பட்டுள்ளது.