ஜியோ நிறுவனத்துக்கு எதிராக மிக கடுமையான டேட்டா திட்டங்களை அனைத்து முன்னணி நெட்வொர்க்குகளும் சவாலான விலையில் கூடுதல் டேட்டாவை வழங்கி வருகின்ற நிலையில் நாள் ஒன்றுக்கு 4.5 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை வோடபோன் ஆஃபர் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது.

வோடபோன் ஆஃபர்

ஜியோ 4ஜி நிறுவனம் கூடுதல் டேட்டாவை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு நாறள் ஒன்றுக்கு 5 ஜிபி டேட்டாவை ரூ.799 விலையில் வழங்கி வரும் நிலையில், இந்த திட்டத்துக்கு எதிராக சவாலினை ஏற்படுத்தும் வகையில் 4.5 ஜிபி டேட்டா திட்டத்தை ரூ.799 கட்டணத்தில் வோடபோன் இந்தியா செயற்படுத்தியுள்ளது.

வோடபோன் 799

வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் , ரோமிங் உட்பட மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் தினமும் 4.5 ஜிபி அளவிற்கான 4ஜி டேட்டாவை வழங்குகின்றது.

இந்த திட்டம் 28 நாட்கள் கால அளவை கொண்டதாக செயற்படுத்தப்படுகின்றது.

வோடபோன் 549

வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் , ரோமிங் உட்பட மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் தினமும் 3.5 ஜிபி அளவிற்கான 4ஜி டேட்டாவை வழங்குகின்றது.

இந்த திட்டம் 28 நாட்கள் கால அளவை கொண்டதாக செயற்படுத்தப்படுகின்றது.  இந்த திட்டம் ஜியோவுக்கு எதிராக ரூ.509 டேட்டா பிளானில் நாள் ஒன்றுக்கு 4ஜிபி டேட்டாவை வழங்குகின்றது.