இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வோடபோன் தொலைத்தொடர்பு நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட கூடுதல் டேட்டா வழங்கும் ரூ.198 டேட்டா பிளானை 3ஜி மற்றும் 4ஜி வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வோடபோன் ரூ.198 பிளான்

ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் வழங்கி வருகின்ற டேட்டா பிளான்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் புதுப்பிக்கப்பட்ட ரூ.198 டேட்டா திட்டத்தை வோடபோன் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது.

அன்லிமிடெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா பயன்பாட்டுக்கு வழங்குவதுடன் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் ரூ.199 கட்டணத்தில் அறிமுகம் செய்திருந்தது.

இந்நிறுவனம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட திட்டத்தை தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வழங்குவதுடன் 28 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 1.4 ஜிபி டேட்டா ஆகியவற்றை வழங்குகின்றது.

இந்த திட்டத்தில் வாரத்திற்கு அதாவது 7 நாட்களுக்கு அதிகபட்சமாக 1000 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படும். வார பயன்பாட்டு அளவிற்கு பிறகு அழைப்புகளின் கட்டணம் விநாடிக்கு ஒரு பைசா என வசூலிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மும்பை உட்பட பல்வேறு வட்டங்களில் இந்த புதிய திட்டம் செயற்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், உங்களுக்கு இந்த திட்டம் கிடைக்குமா என்பதனை அறிய மை வோடபோன் ஆப் அல்லது வோடபோன் இணையதளத்தை அனுகவும்.