இந்தியாவின் முதன்மையான வோடபோன் ஐடியா நிறுவனத்தின், புதிய பிளானாக 396 ரூபாய்க்கு தினமும் 1.4 ஜிபி டேட்டா நன்மை மற்றும் அளவில்லா அழைப்புகளை வழங்கும் வகையில் ஆஃபரை வோடபோன் அறிவித்துள்ளது. முன்பாக இந்நிறுவனம் ரூ.129 கட்டணத்தில் 28 நாட்கள் கொண்ட பிளானை வெளியிட்டிருந்தது.
நாட்டின் முதன்மையான டெலிகாம் நிறுவனமாக விளங்குகின்ற வோடபோன் ஐடியா கூட்டு நிறுவனம் சுமார் 42 கோடி பயனாளர்களை கொண்டுள்ளது. சமீபகாலமாக ஜியோ நிறுவனத்துக்கு சவாலான பிளான்களை வோடபோன் வெளியிட்டு வருகின்றது.
வோடபோன் 396 ரீசார்ஜ் பிளான் ஆஃபர்
சமீப்பத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிளானாக வெளியிடப்பட்ட ரூபாய் 129 ரீசார்ஜ் பிளானில், தினந்தோறும் 1.5 ஜிபி உயர்வேக டேட்டா மற்றும் அளவில்லா வாய்ஸ் கால் , இலவச ரோமிங் நன்மை மற்றும் தினந்தோறும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குவதாக அறிவித்திருந்தது. கூடுதல் நன்மையாக வோடபோன் பிளே சந்தா இலவசமாக பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த பிளான் தமிழ்நாடு மற்றும் சென்னை , குஜராத் உள்ளிட்ட சில வட்டங்களில் கிடைக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில் புதிதாக மற்றொரு ரீசார்ஜ் பிளான் வோடபோன் பிளே சந்தாவுடன் வழங்கப்பட்டுள்ளது. வோடபோன் பிளே வாயிலாக பயனாளர்கள் 5000 க்கு அதிகமான திரைப்படங்கள் மற்றும் 300க்கு அதிகான லைவ் டிவி சேனல்கள் என தமிழ் மொழி உட்பட பல்வேறு இந்திய பிராந்திய மொழிகளில் வோடபோன் பிளே சேவை வழங்கப்பட்டு வருகின்றது. சமீபத்தில் இநநிறுவனம் சன் நெக்ஸ்ட் சேவையை இலவசாக வழங்க தொடங்கியிருக்கின்றது. குறிப்பாக வோடபோன் பிளே ஜியோ நிறுவனத்தின் பிரபலமான ஜியோ டிவி ஆப்பை போன்றதாகும்.
டேட்டா நன்மை : தினசரி உயர்வேக முறையில் 1.4 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது.
வாய்ஸ் கால் – வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளிமாநில எண்கள் மற்றும் ரோமிங் சமயத்தில் எவ்விதமான மறைமுக கட்டணமின்றி வழங்கப்படுகின்றது. ஆனால் வர்த்தகரீதியான அழைப்பு பயன்பாட்டுக்கு ஏற்றதல்ல.
வேலிடிட்டி – 69 நாட்கள் செல்லுபடியாகும்.
முதற்கட்டமாக டெல்லி மற்றும் மும்பை ஆகிய வட்டங்களில் மட்டும் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த ரீசார்ஜ் பிளான் மற்ற வட்டங்களிலும் விரைவில் விரிவுப்படுத்தப்படலாம். உங்களுக்கு இந்த திட்டம் பொருந்துகின்றதா என அறிய வோடபோன் ஆப் அல்லது இணையத்தின் வாயிலாக சோதனை செய்துக் கொள்ளலாம்.
வோடபோன் 399
இந்நிறுவனத்தின் மற்றொரு பிளானாக விளங்கும் ரூபய் 399 பிளானில் உள்ள பலன்கள்-
டேட்டா நன்மை : தினசரி உயர்வேக முறையில் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது.
வாய்ஸ் கால் – வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளிமாநில எண்கள் மற்றும் ரோமிங் சமயத்தில் எவ்விதமான மறைமுக கட்டணமின்றி வழங்கப்படுகின்றது. ஆனால் வர்த்தகரீதியான அழைப்பு பயன்பாட்டுக்கு ஏற்றதல்ல.
வேலிடிட்டி – 84 நாட்கள் செல்லுபடியாகும்.
பொதுவாக வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் (4.16 மணி நேரம்) மற்றும் 10,000 நிமிடங்கள் (166 மணி நேரம்) வாரம் என அழைப்புக்கு நிபதனை விதித்துள்ளன.