போஸ்ட்பெயிட் வாடிகையாளர்ளுக்கு என வோடபோன் செயற்படுத்தி வரும் வோடபோன் ரெட் பிளானில் புதிதாக ஜியோவுக்கு சவால் விடுக்கும் வகையில் ரூ. 299 கட்டணத்தில்  வோடபோன் ரெட் பேசிக் என்ற பிளானை அறிமுகம் செய்துள்ளது.

வோடபோன் ரெட் பேசிக்

இந்தியாவில் தொலை தொடர்பு துறை மிகுந்த சவாலாக மாறியுள்ள நிலையில் , ஜியோ ரூ.199 கட்டணத்தில் போஸ்ட்பெயிட் திட்டத்தை செயற்படுத்தியுள்ள நிலையில், வோடபோன் ரெட் பிளான் திட்டங்கள் ரூ.399 கட்டணத்தில் தொடங்கிய நிலையில், சமீபத்தில் இந்த திட்டங்களில் கூடுதல் நன்மைகளை அறிவித்திருந்த நிலையில் , தற்போது பேசிக் பிளான் ஒன்றை வெளியிட்டுள்ளது.

புதிய ரெட் பேசிக் ரூ. 299 பிளானில் அளவில்லா வாய்ஸ் கால், 20 ஜிபி 3ஜி அல்லது 4ஜி டேட்டா நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ், இலவச ரோமிங் உட்பட கூடுதல் நன்மையாக 12 மாதங்களுக்கு வோடபோன் பிளே இலவச சந்தா வழங்ப்படுகின்றது. இந்த சலுகையுடன் அதிகபட்சமாக 50 ஜிபி வரை ரோல்ஓவர் டேட்டாவை பெற இயலும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை செயற்படுத்த வோடபோன் ஆப் வாயிலாக சென்று  Active Packs & Plans > Browse other plans என்ற முகவரியின் கீழ் ரெட் பேசிக் பிளான் உள்ளதை அறிந்து கொள்ளலாம். சமீபத்தில் இந்நிறுவனம் ரூ. 399 பிளானில் 40 ஜிபி டேட்டா நன்மை என கூடுதல் சலுகையை அறிவித்திருந்தது.