ரிலையன்ஸ் ஜியோ வருகை முற்றிலும் இந்திய தொலைத் தொடர்புத் தொழில்முறையை மாற்றியுள்ளது என்ற உண்மையை மறுக்க முடியாது. அதன் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் காம்போ திட்டங்கள்  முகேஷ் அம்பானி தலைமையிலான டெலிகோவிற்கு மிக பெரும்பலமாக அமைந்துள்ளது. வாடிக்கையாளர்கள் குறைந்த விலையிலான டேட்டா திட்டங்களை விரும்புவதால் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடையே மிக கடுமையான போட்டி நிலவி வருகின்றது.

ரூ.200க்கு குறைவான டேட்டா மற்றும் வாய்ஸ் கால் திட்டங்களை வோடபோன் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவன பிளான்களை  ஒப்பிட்டு சிறந்த பிளானை தேர்ந்தெடுக்கலாம்.

ரிலையன்ஸ் ஜியோ 198

இந்தியாவின் முன்னணி 4ஜி சேவை வழங்குனராக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ ரூ.198 கட்டணத்தில் இலவச வாய்ஸ் கால், நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ், இலவச ரோமிங் உட்பட தினசரி 2ஜிபி அதிவேக டேட்டா போன்றவற்றை 28 நாட்களுக்கு வழங்குகிறது.

வோடபோன் 199

இந்தியாவின் முதன்மையான டெலிகாம் நிறுவனமான வோடபோன் ஐடியா நிறுவனத்தின் கீழ் செயல்படும் வோடபோன் ரூ.199 கட்டணத்தில் இலவச வாய்ஸ் கால் (நாள் ஒன்றுக்கு 250நிமிடங்கள் அல்லது வாரத்திற்கு 1000 நிமிடங்கள் வழங்கப்படும்.) , நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ், இலவச ரோமிங் உட்பட தினசரி 1.4ஜிபி அதிவேக டேட்டா போன்றவற்றை 28 நாட்களுக்கு வழங்குகிறது.

ஏர்டெல் 199

பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.199 கட்டணத்தில் இலவச வாய்ஸ் கால், நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ், இலவச ரோமிங் உட்பட தினசரி 1.4ஜிபி அதிவேக டேட்டா போன்றவற்றை 28 நாட்களுக்கு வழங்குகிறது.