வருடம் முழுவதும் பேச வோடபோன் அறிவித்த ரூ.999 ரீசார்ஜ் பிளான்

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக விளங்கும் வோடபோன் இந்தியா, ரூ.999 கட்டணத்தில் 365 நாட்களுக்கு செல்லுபடியாகின்ற ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது.

வோடபோன் நிறுவனமும், ஐடியா செல்லுலார் நிறுவனமும் இணைந்து இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக சுமார் 40.93 கோடி வாடிக்கையாளர்களை கொண்டு செயல்படுகின்றது.

வோடபோன் ரூ.999 ரீசார்ஜ் பிளான்

பொதுவாக அழைப்புகளை மட்டும் விரும்புபவர்கள், டேட்டா சார்ந்த சமூக வலைதளங்கள் , வீடியோ உள்ளிட்டவற்றை பயன்படுத்தாமல் அழைப்புகளுக்கு மட்டும் மொபைல்களை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்ற ரீசார்ஜ் திட்டமாகும்.

ரூ.999 ரீசார்ஜ் பிளானில் பயனாளர்கள் 365 நாட்களுக்கு அதிகபட்சமாக 12 ஜிபி டேட்டா மட்டும் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் வரம்பற்ற முறையில் உள்ளூர் மற்றும் வெளி மாநில அழைப்புகள், இலவச ரோமிங் ஆகியவற்றை பெற்றுக் கொள்ளலாம். இந்த பிளானின் மொத்த டேட்டா பயன் 12 ஜிபி மட்டும் என்பதனை நினைவில் கொள்ளுங்கள். இந்த திட்டம் பொதுவாக இணையதளங்களை பெரிதும் விரும்பாத பயனாளர்களுக்கான வருடாந்திர ரீசார்ஜ் திட்டமாக அமைந்துள்ளது.

சமீபத்தில் ஒரு நாள் மட்டும்  1 ஜிபி டேட்டா வழங்குகின்ற ரூ.16 மதிப்பிலான ரீசார்ஜ் திட்டத்தை வோடபோன் அறிவித்திருந்தது.