வோடபோன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில், ஒன்றான வோடபோனின் ரூ.501 பிளான் வேலிடிட்டி தற்போது 6 நாட்கள் கூடுதலாக அதிகரிக்கப்பட்டு 90 நாட்களாக வந்துள்ளது. மேலும் டேட்டா 1.4 ஜிபி என்ற தினசரி பயன்பாடு 1.5 ஜிபி டேட்டா என உயர்த்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்நிறுவனம் ரூ.401 திட்டம் 84 நாட்களுக்கும் மற்றும் ரூ.1999 என வருடாந்திர ரீசார்ஜ் பிளான் ஒன்றையும் அறிவித்திருந்தது. இது தவிர இந்நிறுவனத்தின் ரூ. 279 மற்றும் ரூ. 479 பிளான்களின் டேட்டாவும் அதிகரிக்கபட்டுள்ளது. இந்த இரு பிளான்களும் நாள் தோறும் இனி 1.6 ஜிபி டேட்டாவை வழங்கும்.
வோடபோன் ரூ.509 ரீசார்ஜ் பிளானின் சிறப்புகள்
இலவச ரோமிங், வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளிமாநில அழைப்பு நன்மைகள் வழங்குவதுடன், நாள் ஒன்றுக்கு 100 உள்ளூர் மற்றும் வெளிமாநில எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குவதுடன் வேலிடிட்டி 90 நாட்களாக உள்ளது. இதற்கு முன்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் மட்டும் ஆகும்.
நாள் தோறும் டேட்டா சார்ந்த பிரிவில், 1.5 ஜிபி ஆக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. முன்பாக இந்த திட்டத்தில் நாள்தோறும் டேட்டா நன்மை 1.4 ஜிபி ஆக இருந்தது. எனவே, இதன் காரணமாக 9 ஜி பி கூடுதல் டேட்டவை பெறலாம். இதுதவிர கூடுதல் சலுகையாக வோடபோன் பிளே மூலம் படங்கள் மற்றும் வீடியோ, நேரலை டிவி சேனல்களை கண்டு மகிழலாம். தினசரி டேட்டா கடந்த பிறகு ஒரு எம்பி கட்டணம் 50 பைசா ஆகும்.
வோடபோன் நிறுவனம், ரூ.209 பிளானில் நாள் தோறும் டேட்டா பயன்பாட்டை 1.6 ஜிபி வழங்குவதுடன் 28 நாட்கள் வேலிடிட்யை வழங்குகின்றது. அதே போல ரூ.479 பிளானில் நாள் தோறும் டேட்டா பயன்பாட்டை 1.6 ஜிபி வழங்குவதுடன் 84 நாட்கள் வேலிடிட்யை வழங்குகின்றது. இரு பிளான்களிலும் இலவச ரோமிங், வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளிமாநில அழைப்பு நன்மைகள் வழங்குவதுடன், நாள் ஒன்றுக்கு 100 உள்ளூர் மற்றும் வெளிமாநில எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.