தமிழக ப்ரீபெய்டு பயனாளர்களுக்கு என 5 சூப்பர் பிளான்களை வோடபோன் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது. போட்டியாளர்களை எதிர்கொள்ளும் வகையில் மிகவும் சவாலான கட்டணத்தில் பிளான்களை வெளிப்படுத்தியுள்ளது.

வோடபோன் சூப்பர் பிளான்ஸ்

ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்களை எதிர்கொள்ளும் வகையில்  வெளியிடப்பட்டுள்ள 5 பிளான்களின் விபரம் பின் வருமாறு ;-

வோடபோன் 509

84 நாட்கள் வேலிடிட்டியுடன் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.509 கட்டண்த்திலான திட்டத்தில் தினசரி பயன்பாட்டுக்கு என 1GB உயர் வேக டேட்டா, வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், ரோமிங் நேரங்களிலும் வரம்பற்ற அழைப்புகள் போன்றவற்றுடன் நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ் வழங்கப்படுகின்றது..

வோடபோன் 458

70 நாட்கள் வேலிடிட்டியுடன் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.458 கட்டண்த்திலான திட்டத்தில் தினசரி பயன்பாட்டுக்கு என 1GB உயர் வேக டேட்டா, வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், ரோமிங் நேரங்களிலும் வரம்பற்ற அழைப்புகள் போன்றவற்றுடன் நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ் வழங்கப்படுகின்றது.

வோடபோன் 347

28 நாட்கள் வேலிடிட்டியுடன் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.347 கட்டண்த்திலான திட்டத்தில் தினசரி பயன்பாட்டுக்கு என 1GB உயர் வேக டேட்டா, வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், ரோமிங் நேரங்களிலும் வரம்பற்ற அழைப்புகள் போன்றவற்றுடன் உள்ளூர் மற்றும் தேசிய எஸ்.எம்.எஸ் ஒன்றுக்கு 0.25 பைசா கட்டணத்தில் வழங்கப்படுகின்றது.

 

வோடபோன் 199

28 நாட்கள் வேலிடிட்டியுடன் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.199 கட்டண்த்திலான திட்டத்தில் தினசரி பயன்பாட்டுக்கு என 1GB உயர் வேக டேட்டா, வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், ரோமிங் நேரங்களிலும் வரம்பற்ற அழைப்புகள் போன்றவற்றுடன் உள்ளூர் மற்றும் தேசிய எஸ்.எம்.எஸ் ஒன்றுக்கு 0.25 பைசா கட்டணத்தில் வழங்கப்படுகின்றது.

வோடபோன் 79

மிக குறைந்த டேட்டா பிளானாக அறிவிக்கப்பட்டுள்ள வோடபோன் ரூ.79 கட்டணத்திலான பிளானில் 7 நாட்கள் கால அளவுடன் தினசரி பயன்பாட்டுக்கு என 500MB உயர் வேக டேட்டா, வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், ரோமிங் நேரங்களிலும் வரம்பற்ற அழைப்புகள் போன்றவற்றுடன் உள்ளூர் மற்றும் தேசிய எஸ்.எம்.எஸ் ஒன்றுக்கு 0.25 பைசா கட்டணத்தில் வழங்கப்படுகின்றது.

மேலே தொகுக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் சூப்பர் பிளான் என்ற பெயரில் தமிழ்நாடு வட்டத்தில் உள்ள அனைத்து ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.