வோடபோன் ஐடியா கூட்டு நிறுவனத்தின், வோடபோன் ரூ.119 கட்டணத்தில் ப்ரீபெய்டு பயனாளர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா அழைப்பை வழங்குவதுடன் 28 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகின்றது.
வோடபோன் ரூ.119
வோடபோன் இந்தியா நிறுவனம், கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்த பல்வேறு பிளான்களில் கூடுதல் டேட்டா நன்மை மற்றும் அழைப்பு முறையை செயற்படுத்த தொடங்கியுள்ளது.
சமீபத்தில் ரூ.1699 கட்டணத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிளானில் வரம்பற்ற அழைப்பு மற்றும் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டாவை வழங்கியுள்ளது. மேலும் ரூ.476 கட்டணத்தில் 84 நாட்களுக்கு வழங்கப்பட்ட பிளானில் 100 எம்பி ஆதிகரிக்கப்பட்டு தற்சமயம் 1.6ஜிபி டேட்டா நாள் ஒன்றுக்கு மற்றும் வரம்பற்ற அழைப்பு முறையை செயல்படுத்துகின்றது.
வோடபோன் இந்தியாவின் புதிய ரூ.119 ப்ரீபெய்டு ரீசார்ஜ் கட்டணத்தில் தினமும் 1 ஜிபி டேட்டா 4ஜி வேகத்தில் வழங்குவதுடன், வரம்பற்ற அழைப்பினை உள்ளூர் மற்றும் வெளிமாநில அழைப்புகளுக்கு வழங்குவதுடன் மொத்தம் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகின்றது. இந்த பிளானில் எஸ்எம்எஸ் நன்மை வழங்கப்படவில்லை.
பொதுவாக அனைத்து வட்டங்களிலும் வோடபோன் இந்தியா நிறுவனம் ரூ.169 கட்டணத்தில் வரம்பற்ற அழைப்பு முறை, தினமும் 1ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்கள் வழங்கி வருகின்றது. இந்த திட்டம் பொதுவாக அனைத்து வோடபோன் பயனாளர்களுக்கும் வழங்கப்படுகின்றது.
ஆனால் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள வோடபோன் ரூ.119 திட்டம் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்குப்படுவதாக டெலிகாம்டாக் இன்ஃபோ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சலுகை உங்களுக்கு உள்ளதா என்பதனை அறிய வோடபோன் ஆப் அல்லது இணையம் வாயிலாக உங்கள் வோடபோன் எண்ணை உள்ளிட்டு அறிந்து கொள்ளலாம்.